தேங்க்யூ மிஸ்டர் ஐசிசி.. சர்வதேச கிரிக்கெட்டில் ஷிகர் தவான் படைத்துள்ள சாதனைகளின் பட்டியல்

Shikhar Dhawan (1)
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2013 – 2021 வரையிலான காலகட்டங்களில் மேட்ச் வின்னராக செயல்பட்ட அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். இருப்பினும் வயது காரணமாக சமீப காலங்களில் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறிய அவருக்கு போட்டியாக ஜெயஸ்வால் போன்ற இளம் வீரர்கள் வந்துள்ளனர்.

அதனால் 38 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள தவான் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய இந்த அறிவிப்பால் ஏமாற்றமடைந்துள்ள இந்திய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் மிஸ்டர் ஐசிசி என்றழைக்கப்படும் ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டில் படைத்துள்ள சில சாதனைகளை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

தவான் சாதனைகள்:

1. ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய சேனா நாடுகளில் சதமடித்த ஒரே இந்திய துவக்க வீரராக தவான் சாதனை படைத்துள்ளார். சச்சின், சேவாக், ரோஹித் போன்ற யாருமே இந்த சாதனையை படைத்ததில்லை.

2. ஷிகர் தவான் 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் 20 இன்னிங்ஸில் 1238 ரன்களை 65.15 சராசரியில் குவித்துள்ளார். அதன் வாயிலாக ஐசிசி ஒருநாள் தொடர்களில் குறைந்தது 1000 ரன்கள் அடித்த வீரர்களில் 65+ சராசரியை கொண்ட ஒரே வீரராக தவான் உலக சாதனை படைத்துள்ளார். அதனாலேயே அவரை ரசிகர்கள் மிஸ்டர் ஐசிசி என்றழைக்கின்றனர்.

- Advertisement -

3. அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் தவான் படைத்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு மொஹாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமான அவர் 85 பந்துகளில் சதமடித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

4. 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருது வென்ற அவர் தொடர்நாயகன் விருதை வென்றார். மேலும் 2015 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சாதனை படைத்தார்.

- Advertisement -

மிஸ்டர் ஐசிசி தவான்:

5. 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா ஃபைனல் வரை சென்றதற்கு முக்கிய பங்காற்றிய தவான் மீண்டும் கோல்டன் பேட் விருதை வென்றார். அதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராவியில் 2 கோல்டன் பேட் விருதுகளை வென்ற ஒரே வீரராக தவான் உலக சாதனை படைத்துள்ளார்.

6. 2018 ஆசிய கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற தவான் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் உணவு இடைவெளிக்கு முன்பே சதமடித்த முதல் இந்திய வீரராகவும் அவர் சரித்திரம் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2018) படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 42/5 டூ 173.. மிரட்டிய தெ.ஆ.. ஒரே ஓவரில் 6, 6, 6, 6.. வெ.இ பதிலடி.. 250 ஸ்ட்ரைக் ரேட்டில் ஓடவிட்ட பூரான்

7. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000, 2000, 3000 ரன்கள் அடித்த இந்திய வீரராகவும் தவான் சாதனை படைத்துள்ளார். அது போல கங்குலி – சச்சினுக்கு (8227) பின் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து அதிக ரன்கள் (5193) பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஓப்பனிங் ஜோடியாகவும் தவான் சாதனை படைத்துள்ளார்.

Advertisement