12 வருசத்துல ஒன்னு தான்னு நினைக்காதீங்க.. நாங்க விட்டதை இந்திய பசங்க செய்றாங்க.. டிராவிட் பெருமிதம்

Rahul Dravid 2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போல இந்தியாவும் தற்சமயத்தில் டாப் அணியாக வலம் வருகிறது. 1983 உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையில் வென்ற இந்தியா சர்வதேச கிரிக்கெட்டில் ஆழமாக வேரூன்றத் துவங்கியது. இருப்பினும் 90களில் நிறைய மேட்ச் வின்னர்கள் இல்லாததால் சச்சின் டெண்டுல்கர் அடித்தால் தான் இந்தியா வெல்லும் என்ற பரிதாப நிலைமை இருந்தது.

ஆனால் அதன் பின் சௌரவ் கங்குலி, எம்.எஸ். தோனி ஆகிய மகத்தான கேப்டன்கள் இந்தியாவுக்கு கிடைத்தனர். அவர்களுடைய தலைமையில் நிறைய இளம் வீரர்கள் வாய்ப்பை ஆதரவையும் பெற்று மேட்ச் வின்னர்களாக அவதரித்தனர். அதனால் 21ஆம் நூற்றாண்டில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய இந்தியா உலகின் டாப் அணியாக பல சாதனைகளை படைத்து வருகிறது.

- Advertisement -

12 வருடத்தில் 1:

இதற்கிடையே துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் நிறைய இளம் வீரர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அதனால் விராட் கோலி, ரோஹித் சர்மா தலைமையிலான சமீப காலத்து இந்திய அணியில் கிட்டத்தட்ட அனைத்து வீரர்களுமே மேட்ச் வின்னர்களாக அசத்தி வருகின்றனர். ஆனாலும் சாதாரண இருதரப்பு தொடர்களில் மிரட்டும் இந்தியா ஐசிசி உலகக் கோப்பைகளில் தடுமாறுவதை வழக்கமாக வைத்துள்ளது.

குறிப்பாக 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை தோனி தலைமையில் இந்தியா வென்றது. அதன் பின் 10 வருடமாக ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியாமல் திண்டாடிய இந்தியா ஒரு வழியாக 2025 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் வென்றது. இந்நிலையில் தாம், சச்சின் டெண்டுல்கர் போன்றவர்கள் ஓய்வு பெற்ற பின் வந்த அடுத்த தலைமுறை வீரர்கள் இந்திய அணியை அப்படியே முன்னோக்கி எடுத்துச் செல்வதாக ஜாம்பவான ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

தரமான அடுத்த தலைமுறை:

கடந்த 12 வருடங்களில் ஒரு உலகக் கோப்பையை மட்டுமே வென்றாலும் இந்தியா தொடர்ந்து அசத்தி வருவதாகவும் டிராவிட் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2011 – 2012இல் நான் விலகினேன். அதன் பின்பும் இந்த வீரர்களால் நமது மரபை அப்படியே எடுத்துச் செல்ல முடிந்தது. நாங்கள் விலகிய பின் கடந்த 12 வருடங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் நம்முடைய செயல்பாடுகளை பார்த்தால் அது அபாரமாக இருக்கிறது”

இதையும் படிங்க: இங்கிலாந்து 2025 தொடருக்கான அட்டவணையை வெளியீடு.. 2022இல் தவறிய சரித்திரத்தை இந்தியா படைக்குமா?

“அதற்கு அடையாளமாக நாம் எப்போதும் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அல்லது 2வது இடத்திலேயே இருக்கிறோம். நமது வீரர்களின் திறமை, விளையாட்டை அவர்கள் அணுகும் விதம் போன்றவை சிறப்பாக உள்ளது” என்று கூறினார். அவர் கூறுவது போல இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் தடுமாறுகிறது. ஆனால் சச்சின், கங்குலி, டிராவிட் ஓய்வுக்குப் பின் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து அசத்துவது குறிப்பிடத்தக்கது.

Advertisement