அவருக்கு சான்ஸ் கொடுங்க.. ஸ்மித், ஹெட் மண்டைய பதம் பாக்கலன்னு பெயரை மாத்திக்கிறேன்.. பசித் அலி

Basit ali
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. அதில் வெற்றி பெற்று இந்தியா ஹாட்ரிக் முறையாக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 2018/19, 2020/21 தொடர்களை இந்தியா வென்று சாதனை படைத்தது.

அதனால் 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் ஆசிய அணியாகவும் இந்தியா வரலாறு படைத்துள்ளது. அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய இந்தியா தயாராகி வருகிறது. அதற்காகவே இம்முறை ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு தற்போது ஓய்வு கொடுத்துள்ளது.

- Advertisement -

மிரட்டல் மயங்:
முன்னதாக அந்தத் தொடரில் உலகின் நம்பர் ஒன் பவுலராக கருதப்படும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோரின் தலையை பதம் பார்க்கும் அளவுக்கு இளம் வீரர் மயங் யதாவ் வேகமாக பந்து வீசும் திறமையைக் கொண்டுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி கூறியுள்ளார்.

எனவே அவரை ஆஸ்திரேலிய தொடரில் தேர்ந்தெடுக்குமாறு அவர் இந்திய அணி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளார். அப்படி இல்லையெனில் தம்முடைய பெயரையே மாற்றிக் கொள்கிறேன் என்று சவாலும் எடுக்கும் பசித் அலி இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “அவர் ஃபிட்டாக வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். ஏனெனில் அவர் தற்போது என்சிஏவில் குணமடைந்து வருவதாக எனக்கு இந்தியாவில் இருந்து தகவல் கிடைத்தது”

பெயரை மாத்திக்கிறேன்:
“ஒருவேளை இந்தக் குழந்தை முழுமையாக ஆஸ்திரேலியாவில் விளையாடினால் டிராவிஸ் ஹெட், ஸ்மித், லபுஸ்ஷேன் ஆகியோர் அவரை எதிர்கொண்டு அடிக்க முன்னோக்கி வருவார்கள். அப்போது அந்த பேட்ஸ்மேன்களின் தலையில் அவர் பவுன்சர் பந்தால் அடிக்காமல் போனால் என்னுடைய பெயரை மாற்றிக் கொள்கிறேன். அவர் அவர்களை ஓட விடுவார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 13 போர்ஸ் 9 சிக்ஸ்.. ஃபார்முக்கு வந்துட்டேன்.. எனக்கு அந்த சான்ஸ் கொடுங்க.. கருண் நாயர் மறைமுக கோரிக்கை

அவர் கூறுவது போல 2024 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் அறிமுகமான மயங் யாதவ் 155க்கும் மேற்பட்ட வேகத்தில் வீசினார். அந்த வகையில் தனது முதல் 2 போட்டிகளிலேயே எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்ட அவர் ஆட்டநாயகன் விருது வென்றார். இருப்பினும் அதன் பின் காயத்தை சந்தித்து அவர் தற்போது குணமடைந்து வருகிறார். எனவே இயற்கையாகவே வேகத்துக்கு கைகொடுக்கும் ஆஸ்திரேலிய மண்ணில் மயங் யாதவ் விளையாடுவது அவசியம் என்று பசித் அலி கூறியுள்ளார்.

Advertisement