இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 2008-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 295 ஒருநாள் போட்டிகள், 113 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 125 டி20 போட்டிகள் என சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 550 போட்டிகள் அருகில் வரை விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ள விராட் கோலி தற்போது இந்திய கிரிக்கெட் வீரரை ஆரம்பித்து 16 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதன் காரணமாக தற்போது பல்வேறு தரப்பிலும் இருந்தும் விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் விராட் கோலியின் இந்த 16 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கான வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ரோகித் சர்மா கூறுகையில் :
விளையாட்டில் இருக்கும் விராட் கோலியின் பசியும், ஆர்வமும் ஈடு செய்ய முடியாதது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு போட்டியிலும் அவர் ஒவ்வொரு வித்தியாசமான ஆற்றலுடன் களமிறங்கி அட்டகாசப்படுத்துவார். இந்திய அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய மிகப்பெரிய அனுபவத்தை கொண்ட அவர் பல போட்டிகளில் நமது அணியின் வெற்றிக்காக தீவிரமான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு வீரரின் திறமையை எளிதில் எங்கும் சென்று சந்தையில் வாங்கிட முடியாது. அவரது கரியரில் பல்வேறு போராட்டங்கள், கடினமான சூழ்நிலைகளில் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் என ஒவ்வொன்றையும் கடந்து இன்று மிகப்பெரிய வீரராக நிற்கிறார். அவருடைய ஆற்றல் அளவிட முடியாத ஒன்று என ரோகித் சர்மா அவரை பாராட்டியுள்ளார்.
விராட் கோலியின் திறமையை விலைக்கு வாங்க முடியாது என்று ரோகித் கூறியுள்ள இந்த கருத்து ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. உலகெங்கிலும் இருக்கும் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வரும் விராட் கோலி உடற்தகுதிக்கு இன்றளவும் முக்கியத்துவம் அளித்து வருவதாலேயே இந்த வயதிலும் அவரால் பிட்டாக இருக்க முடிகிறது.
இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட்டில் வருங்காலத்தில் உடைக்க முடியாத விராட் கோலியின் 3 உலக சாதனைகள்
அவரைப் பார்த்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு கிரிக்கெட் நிர்வாகங்களும் தங்களது அணியின் வீரர்களை பிட்டாக இருக்கும்படி கூறும் அளவிற்கு விராட் கோலி உடற்தகுதியில் முன்னுதாரணமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.



