ஒருநாள் கிரிக்கெட்டில் வருங்காலத்தில் உடைக்க முடியாத விராட் கோலியின் 3 உலக சாதனைகள்

Virat Kohli 2
- Advertisement -

இந்திய வீரர் விராட் கோலி ஆகஸ்ட் 18ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் தம்முடைய 16வது வருடத்தை நிறைவு செய்தார். கடந்த 2008 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து அசத்தி வரும் அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். இதுவரை 26000+ ரன்கள் 80 சதங்கள் குவித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

முன்னதாக தம்முடைய 16 வருட கேரியரில் விராட் கோலி நிறைய உலக சாதனைகளை படைத்துள்ளார். இருப்பினும் அவர் படைத்துள்ள சில சாதனைகளை வருங்காலத்தில் உடைப்பது மிகவும் கடினமாக பார்க்கப்படுகிறது. அந்த சாதனைகள் பின்வருமாறு.
1. அதிக சதங்கள்: ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 50 சதங்கள் அடித்துள்ளார். அதனால் சச்சினை (49) முந்தி ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரராக ஏற்கனவே விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

3, 4, 5வது இடங்களில் முறையே ரோஹித் சர்மா (31*), ரிக்கி பாண்டிங் (30), ஜெயசூர்யா (28) உள்ளனர். தற்போது டி20 கிரிக்கெட்டின் வருகையால் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. அதனால் இப்போதே முதலிடத்தில் எட்டாத உயரத்தில் இருக்கும் விராட் கோலியின் இந்த சாதனையை வருங்கால வீரர்கள் உடைக்க முடியாது என்றே சொல்லலாம்.

2. சேஸ் மாஸ்டர்: பொதுவாக விராட் கோலியை சேஸ் மாஸ்டர் என்று வல்லுநர்கள் அழைப்பார்கள். ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தம் அடித்துள்ள 50 சதங்களில் சேசிங்கில் மட்டும் அவர் 27 சதங்கள் அடித்துள்ளார். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் சேசிங் செய்த போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரராக விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெறும் 17 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

பொதுவாகவே 2வது இன்னிங்சில் ஒரு சில விக்கெட்டுகள் இழந்தாலும் ரன்ரேட் அதிகரித்து சேசிங் செய்வது கடினமாகி விடும். அப்படிப்பட்ட அழுத்தமான சேசிங்கில் பேட்ஸ்மேன்கள் சதமடிப்பது மிகவும் கடினமாகும். அந்த விஷயத்தில் சச்சினை விட 10 சதங்கள் கூடுதலாக அடித்துள்ள விராட் கோலியின் சாதனையை வருங்கால வீரர்கள் உடைப்பதற்கு அசாத்தியம் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: அந்த இந்திய ஜாம்பவானை பாத்து வளந்தாலும்.. தோனி தான் என்னோட குரு மாதிரி.. கலீல் அஹ்மத் பேட்டி

3. அதிக ரன்கள்: 2023 உலகக் கோப்பையில் ரன் மெஷினாக செயல்பட்ட விராட் கோலி 765 ரன்கள் குவித்தார். அதனால் சச்சின் டெண்டல்கரை (673) முந்தி ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக விராட் கோலி உலக சாதனை படைத்தார். அவரைத் தவிர்த்து வேறு யாருமே 700 ரன்கள் கூட தொட்டதில்லை. எனவே ஒரு ஐபிஎல் தொடரில் 973 ரன்கள் குவித்த விராட் கோலியின் சாதனை இன்றும் உடைக்கப்படாமல் இருப்பது போல இந்த உலக சாதனையும் காலம் கடந்து நின்று பேசலாம்.

Advertisement