டெஸ்ட் கிரிக்கெட்டில் முடிவுக்கு ரஹானே மற்றும் புஜாராவின் கரியர்.. காரணமே இதுதான் – பி.சி.சி.ஐ செய்த வேலை

Rahane-Pujara
- Advertisement -

இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையில் மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய ஒருநாள் அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை (0-2) என்ற கணக்கில் இழந்தது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி டி20 தொடரில் வெற்றி பெற்றாலும் ரோகித் சர்மா தலைமையில் ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதற்கடுத்து இந்திய அணிக்கு அடுத்த ஒரு மாதத்திற்கு எவ்வித சர்வதேச போட்டிகளும் கிடையாது. அடுத்த மாதம் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் அதன் பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் அதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் என பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

அந்தவகையில் அடுத்தடுத்து இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் மட்டுமே பங்கேற்க உள்ளது. இதற்காக தற்போது இந்திய அணி வீரர்கள் முழு வீச்சில் தங்களது வாய்ப்புக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாட தயாராகி வருகின்றனர்.

எதிர்வரும் துலீப் டிராபி தொடர், புஜ்ஜி பாபு தொடர் என உள்ளூர் தொடர்களில் அசத்தும் வீரர்களுக்கு டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் மற்றும் பும்ரா தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் இந்த தொடர்களில் விளையாட இருக்கின்றனர்.

- Advertisement -

அதேவேளையில் துலீப் டிராபி தொடரில் இடம் பிடிக்காத வீரர்களுக்கு நிச்சயம் இந்திய அணியில் இடம் கிடைக்காது என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த துலீப் டிராபி தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் அனுபவ வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் இனி அவர்களது டெஸ்ட் கரியர் முடிவுக்கு வந்தது என்றே கூறலாம்.

இதையும் படிங்க : பஞ்சாப் அணியின் வீரரை வைத்து பொல்லார்டின் இடத்தை நிரப்ப முடிவு செய்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி – விவரம் இதோ

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவ வாய்ந்த வீரர்களாக திகழ்ந்து வந்த ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் தற்போது 36 வயதை எட்டி விட்டதாலும் அவர்களின் பார்ம் அவுட் காரணமாகவும் கடந்த சில ஆண்டுகளாகவே அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் வேளையில் தற்போது துலீப் டிராபி தொடரிலும் பி.சி.சி.ஐ அவர்களுக்கு இடம் கொடுக்காதது அவர்களது கரியரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்று கூறலாம்.

Advertisement