தசாப்தம் தாண்டிருச்சு.. கடைசியாக விராட், ரோஹித் எப்போது துலீப் கோப்பையில் விளையாடினார்கள் தெரியுமா?

Rohit and VIrat
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள அத்தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்க உள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணியினர் வேறு எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை.

இந்த சூழ்நிலையில் இந்தியாவின் பிரபல உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை வரும் செப்டம்பர் 5ஆம் தேதி துவங்க உள்ளது. மொத்தம் 6 போட்டிகளைக் கொண்ட அத்தொடரில் இந்தியா ஏ, பி, சி, டி ஆகிய 4 அணிகள் விளையாட உள்ளன. அந்தத் தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை பிசிசிஐ விளையாட வைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

தசாப்தம் தாண்டி:
குறிப்பாக புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் ஃபிட்டாக இருக்கும் அனைவரும் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என்ற கோட்பாட்டை கொண்டு வந்துள்ளார். அதனால் சமீபத்திய இலங்கை ஒருநாள் தொடரில் ஓய்வெடுக்க முடிவு எடுத்திருந்த விராட், ரோஹித்தை அவர் வலுக்கட்டாயமாக விளையாட வைத்தார். அந்த வரிசையில் தற்போது கம்பீர் பரிந்துரைப்படி துலீப் கோப்பையிலும் விராட், ரோஹித்தை பிசிசிஐ விளையாட வைக்க முடிவெடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து விராட் கோலி முழுமையாக ஒரு தசாப்தம் கடந்து 14 வருடங்களுக்குப் பின் துலீப் கோப்பையில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது. ஆம் கடைசியாக அவர் கடந்த 2010ஆம் ஆண்டு வடக்கு மண்டல அணிக்காக மேற்கு மண்டல அணிக்கு எதிராக விளையாடினார். ட்ராவில் முடிந்த அப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 56 ரன்கள் அடித்த அவர் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யவில்லை.

- Advertisement -

மறுபுறம் ரோகித் சர்மா கடைசியாக துலீப் கோப்பையில் 2016ஆம் ஆண்டு இந்தியா நீலம் அணிக்காக இந்தியா சிவப்பு அணிக்கு எதிராக விளையாடினார். அப்போட்டியில் 30, 32 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் சுமாராகவே விளையாடினார். மறுபுறம் ரவீந்திர ஜடேஜா 10 விக்கெட்டுகள் எடுத்த உதவியுடன் அப்போட்டியில் இந்தியா நீலம் அணியை இந்தியா சிவப்பு அணி 355 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முரட்டுத்தனமான வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: கம்பீர் சொல்வதை எல்லாம் கேக்க முடியாது.. ரோஹித் மற்றும் கோலி எடுத்த அதிரடி முடிவு – பி.சி.சி.ஐ கொடுத்த அனுமதி

இதைத் தொடர்ந்து வங்கதேச தொடருக்கு தயாராவதற்காக கே.எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட் போன்ற பெரும்பாலான இந்திய வீரர்களும் துலீப் கோப்பையில் விளையாட உள்ளனர். அதே போல ஷமி காயத்திலிருந்து குணமடைந்து விளையாட உள்ளார். இருப்பினும் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மட்டும் அந்தத் தொடரிலும் வங்கதேச தொடரிலும் ஓய்வு கொடுக்கப்பட உள்ளது.

Advertisement