ஒலிம்பிக்கால் பாக்கல.. அவர் இல்லாததால் இந்திய அணியை இலங்கை தோற்கடிச்சுட்டாங்க.. ஹர்பஜன் ஓப்பன்டாக்

Harbhajan Singh 3.jpeg
- Advertisement -

இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடியது. ஆனால் அத்தொடரின் முதல் போட்டியிலேயே 231 ரன்களை அடிக்க முடியாமல் சமன் செய்த இந்தியா 2வது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதை விட 3வது போட்டியில் மோசமாக விளையாடிய இந்தியா 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

அதனால் 1997க்குப்பின் 27 வருடங்கள் கழித்து இலங்கைக்கு எதிராக ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அத்துடன் 2010க்குப்பின் 14 வருடங்கள் கழித்து இலங்கையிடம் அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் இந்தியா பரிதாபமாக தோற்றது. அந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது.

- Advertisement -

இதெல்லாம் சகஜம்:
மேலும் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேட்டிங் வரிசையில் செய்த சில மாற்றங்களும் தோல்வியை கொடுத்தது. இந்நிலையில் 2024 ஒலிம்பிக் போட்டிகளை பார்த்ததால் இந்தியா – இலங்கை ஒருநாள் தொடரை பார்க்கவில்லை என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் ஜஸ்ப்ரித் பும்ரா, பாண்டியா போன்ற சில முக்கிய வீரர்கள் இல்லாத இந்திய அணியை இலங்கை தோற்கடித்ததாக அவர் கூறியுள்ளார்.

அதே சமயம் விராட் கோலி, ரோஹித் சர்மா இருந்த இந்திய அணியை தோற்கடித்ததற்காக இலங்கையை பாராட்டும் அவர் இதெல்லாம் சகஜம் என்று ரசிகர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் இந்தியா – இலங்கை மோதிய தொடரில் ஒரு பந்தை கூட நான் பார்க்கவில்லை. ஏனெனில் நான் ஒலிம்பிக் போட்டிகளை மட்டுமே பார்த்தேன்”

- Advertisement -

“ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது அதிலிருந்து உங்களுடைய கண்களை எடுக்க முடியாது. சில நேரங்களில் நீங்கள் வெல்வீர்கள் சில நேரங்களில் தோற்ப்பீர்கள். அது தான் விளையாட்டாகும். அனைத்து கிரிக்கெட்டர்களும் இந்த சூழ்நிலைகளை கடந்தே வருவார்கள். நீங்கள் நன்றாக விளையாடினாலும் சில நேரங்களில் வெல்ல முடியாது. இதற்காக நீங்கள் இலங்கைக்கு பாராட்டு கொடுக்க வேண்டும். அவர்கள் இந்தியாவை விட நன்றாக விளையாடினர்”

இதையும் படிங்க: ஒரு தோல்விக்காக கம்பீரை குறைச்சு மதிப்பிடாதீங்க.. செயலில் காட்டியதை பாருங்க.. உத்தப்பா ஆதரவு

“இந்திய அணி செய்யாத ஏதோ ஒன்றை அவர்கள் நன்றாக செய்துள்ளனர். அதனாலேயே அவர்கள் அரிதாக இந்தியாவுக்கு எதிராக தொடரை வென்றுள்ளனர். ஆனால் அந்த தொடரில் பும்ரா போன்றவர்கள் இல்லாததால் இந்தியாவின் பவுலிங் உச்சமாக இல்லை. இருப்பினும் விராட், ரோஹித், ராகுல் இருந்ததால் பேட்டிங் நன்றாகவே இருந்தது. அதனால் இது இலங்கை கிரிக்கெட்டில் நல்ல சாதனையாகும். இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement