ஒரு தோல்விக்காக கம்பீரை குறைச்சு மதிப்பிடாதீங்க.. செயலில் காட்டியதை பாருங்க.. உத்தப்பா ஆதரவு

Robin Uthappa 3
- Advertisement -

இலங்கைக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 27 வருடங்களாக இலங்கைக்கு எதிராக இருதரப்பு ஒருநாள் தொடரில் தோற்காமல் இருந்து வந்த கௌரவ சாதனையை இந்தியா காற்றில் பறக்க விட்டது. அத்துடன் 10 வருடங்கள் கழித்து இலங்கைக்கு எதிராக அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக இந்தியா தோற்றது.

அந்த தோல்விக்கு பெரிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முக்கிய காரணமாக அமைந்ததாக ரசிகர்கள் விமர்சித்தனர். ஏனெனில் அத்தொடரில் ருதுராஜ், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்களை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அத்துடன் 4, 5வது பேட்டிங் வரிசையில் களமிறங்கக்கூடிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரை அவர் 6, 7வது களமிறக்கிய முடிவு வெற்றிக்கு கைகொடுக்கவில்லை.

- Advertisement -

உத்தப்பா ஆதரவு:
இந்நிலையில் இலங்கைத் தொடரில் சந்தித்த தோல்விக்காக ரசிகர்கள் கௌதம் கம்பீரின் திறமையை சந்தேகப்பட வேண்டியதில்லை என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். மேலும் அணியில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உணரும் அளவுக்கு அனைத்து வீரர்களுக்கும் கம்பீர் போதுமான பாதுகாப்பு கொடுப்பதாகவும் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

மேலும் ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் அசத்துவதற்கு தேவையான பாடங்களை இலங்கை போன்ற சாதாரண இருதரப்பு தொடரில் கம்பீர் தேடுவதாகவும் உத்தப்பா ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கம்பீர் எப்போதும் அழுத்தத்தின் கீழ் செழித்து வளரும் ஒருவராக இருக்கிறார். அவர் பெரிய தொடர்களில் அசத்துவதற்கு தேவையான கட்டங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார். என்னைப் பொறுத்த வரையில் இந்தக் அணிக்குள்ளேயே ஒரு தலைவராக இருக்கும் குணங்களை அவரிடமும் காண்கிறேன்”

- Advertisement -

“அவர் முக்கிய வாய்ப்புகளைத் தேடி அவற்றைக் கைப்பற்ற முயற்சிப்பார். ஒரு தலைவராக அவர் வீரர்கள் சிறந்து விளங்குவதற்கு உதவும் சூழலை உருவாக்குவார் என்பதை என்னால் உறுதியளிக்க முடியும். அந்த வகையான தலைவரான அவர் ஒரு சிறந்த தந்திரோபாயவாதி. அவர் அணிக்குள் வெற்றியை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சாரத்தை வளர்க்கிறார்”

இதையும் படிங்க: 19 வயசை தோற்கடிப்பாரு.. அதை செய்யும் வரை இந்திய கிரிக்கெட்டுக்கு விராட், ரோஹித் வேணும்.. ஹர்பஜன் பேட்டி

“கெளதம் கம்பீர் தனது வீரர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் ஒரு தலைவர். அதை நாம் செயலில் பார்த்தோம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்த மாதம் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து இந்திய வீரர்களும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement