விராட், ரோஹித்தை விட முக்கியமான.. ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு 2 தொடரில் ஓய்வு சலுகையை வாரி வழங்கிய பிசிசிஐ

- Advertisement -

இலங்கைக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணி வேறு எந்த சர்வதேச தொடரிலும் விளையாடவில்லை. அந்த சூழ்நிலையில் இந்தியாவில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி துலீப் கோப்பை துவங்க உள்ளது.

அதில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்களை விளையாட வைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக சமீபத்திய இலங்கை ஒருநாள் தொடரில் அவர்கள் ஓய்வெடுக்க முடிவெடுத்திருந்தனர். ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் ஃபிட்டாக இருந்தால் அனைவரும் விளையாடியாகி வேண்டும் என்ற கோட்பாட்டுடன் அவர்களை இலங்கைத் தொடரில் விளையாட வைத்தார்.

- Advertisement -

2 தொடரில் ஓய்வு சலுகை:
அதே சமயம் தனித்துவமான பவுலிங் ஆக்சனை கொண்ட ஜஸ்ப்ரித் பும்ரா முக்கியமான வீரர் என்பதால் அவருக்கு மட்டும் இலங்கை தொடரில் ஓய்வு கொடுப்பதாக கம்பீர் தெரிவித்திருந்தார். அதே போல தற்போது கௌதம் கம்பீரின் பரிந்துரைப்படி துலீப் கோப்பையிலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை விளையாட வைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

அத்துடன் வங்கதேச தொடருக்கு தயாராவதற்காக கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் உள்ளிட்ட பெரும்பாலான நட்சத்திர இந்திய வீரர்களை துலீப் கோப்பையில் விளையாட வைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ஆனால் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மட்டும் துலீப் கோப்பையில் ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -

அது போக செப்டம்பர் மாதம் நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடரிலும் அவருக்கு பிசிசிஐ ஓய்வு கொடுக்க முடிவெடுத்துள்ளது. ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய பும்ராவை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை விட இந்தியாவின் முக்கிய வீரராக பிசிசிஐ கருதுகிறது. அத்துடன் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது.

இதையும் படிங்க: ஒருவருக்கு மட்டுமே ஓய்வு.. கம்பீர் வலுக்கட்டாயத்தால் துலீப் கோப்பையில் விளையாடும் விராட், ரோஹித் – நட்சத்திர வீரர்கள்

எனவே வேகத்துக்கு சாதகமான மைதானங்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அந்தத் தொடரில் இந்தியா வெல்வதற்கு பும்ரா அவசியம் என்பது அனைவருக்குமே தெரியும். எனவே தொடரில் காயங்களை தவிர்த்து புத்துணர்ச்சியுடன் விளையாடுவதற்காக பும்ராவுக்கு துலீப் கோப்பை, வங்கதேச டெஸ்ட் தொடரில் ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதே சமயம் ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக அக்டோபர் மாதம் நடைபெறும் நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ரா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement