கேரியர் முடியல.. 2025 சாம்பியன்ஸ் ட்ராபி அங்க நடந்தா ஜடேஜாவுக்கு வாய்ப்பிருக்கு.. ஆகாஷ் சோப்ரா கருத்து

Aakash Chopra 88
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்றனர். அதில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இருப்பினும் அவர்களுடன் ஓய்வு பெற்ற ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறியிருந்தார். ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் அவரை சமீபத்திய இலங்கை ஒருநாள் தொடரில் தேர்ந்தெடுக்கவில்லை.

- Advertisement -

ஜடேஜாவுக்கு வாய்ப்பிருக்கு:
அத்துடன் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரை சாம்பியன்ஸ் ட்ராபியில் கெளதம் கம்பீர் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக தேர்ந்தெடுக்க விரும்புவதாக செய்திகள் வெளியாகின. அதனாலேயே இலங்கை ஒருநாள் தொடரில் அந்த இருவரும் வாய்ப்பு பெற்று விளையாடினார்கள். அதனால் ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார் வரிசையில் ரவீந்திர ஜடேஜாவின் ஒருநாள் கிரிக்கெட் கேரியரும் முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி பாகிஸ்தானுக்கு வெளியே துபாய் அல்லது இலங்கையில் நடைபெற்றால் ரவீந்திர ஜடேஜா விளையாட வாய்ப்புள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சாம்பியன் ட்ராபியில் அக்சர் படேலுடன் ரவீந்திர ஜடேஜாவும் இருப்பார் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் இருவரும் டி20 உலகக் கோப்பையில் ஒன்றாக விளையாடினர்”

- Advertisement -

“மறுபுறம் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடுமா? அதற்கு வாய்ப்பில்லை. அது போன்ற சூழ்நிலையில் துபாய் அல்லது இலங்கையில் இந்தியா விளையாடும். ஒருவேளை அங்கே நாம் விளையாடினால் நமக்கு விரல் ஸ்பின்னர்கள் தேவை. அது போன்ற சூழ்நிலையில் அந்த இருவருமே விளையாடுவார்கள் என்று நான் நினைக்கிறேன். எனவே அக்சர் – ஜடேஜா ஆகிய இருவருமே தேர்வாக வாய்ப்புள்ளது”

இதையும் படிங்க: தோல்வியை மட்டும் பாக்காதீங்க.. இந்தியாவுக்கு ஒரு தரமான பிளேயரும் 2 நல்ல விஷயம் கிடைச்சதை பாருங்க.. டிகே

“ஆனால் தற்சமயத்தில் அக்சர் படேல் தமக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் நன்றாக செயல்பட்டு வருகிறார். மறுபுறம் அவரை விட ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்படவில்லை. அது தான் தற்போதைய நிலையாக இருக்கிறது” என்று கூறினார். அந்த வகையில் அனுபவத்தை கருத்தில் கொண்டு ரவீந்திர ஜடேஜாவுக்கு 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ஜடேஜாவின் ஒருநாள் கேரியர் இன்னும் முடிந்து விடவில்லை என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement