நீரஜ் சோப்ராவை வச்சி இப்படியா விளம்பரம் தேடுவீங்க.. ரிஷப் பண்டின் செயலை கண்டித்த – இந்திய வீரர் கோஸ்வாமி

Pant-and-Neeraj
- Advertisement -

பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸ் நகரில் 2024-ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாபெரும் தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் பதக்கத்திற்காக ஒவ்வொரு பிரிவிலும் மோதி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த பல்வேறு வீரர், வீராங்கனைகளும் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

அந்தவகையில் இந்தியாவை சேர்ந்த பிரபல ஈட்டி எறிதல் பிரிவை சேர்ந்த வீரரான நீரஜ் சோப்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போதே ஈட்டி எறிதல் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். அதனால் அவருக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் தங்கமகன் என்ற பெயரும் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இம்முறையும் அவர் நிச்சயம் இந்தியாவுக்காக ஈட்டி எறிதல் பிரிவில் தங்க பதக்கத்தை வென்று தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்த படியே இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த அவர் பாகிஸ்தான் வீரரிடம் தோல்வியை சந்தித்து வெள்ளி பதக்கத்தோடு வெளியேறியிருந்தார்.

இந்நிலையில் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றால் நான் செய்யும் பதிவிற்கு லைக் மற்றும் கமெண்ட் செய்யும் ஒரு அதிர்ஷ்டமான ரசிகருக்கு 1000089 ரூபாய் கொடுப்பேன் என்றும், மேலும் 10 அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு விமான டிக்கெட்டை பரிசளிப்பேன் என்று இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் அறிவித்திருந்தார்.

- Advertisement -

அவரது இந்த பதிவை கண்டித்து இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் குறிப்பிடப்பட்டதாவது : நீரஜ் சோப்ராவை வைத்து இப்படி விளம்பரம் தேடாதீர்கள்.. முதலில் உங்களது பி.ஆர் டீமிடம் இருந்து வெளியேவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : அவங்க முன்னாடி இந்தியாவை தோற்கடிச்சதை விட வேற சுகம் இருக்க முடியாது.. ஆடம் ஜாம்பா பேட்டி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ள அவரை கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துமாறும் ரசிகர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement