4வது இடம் விளையாட்டா போச்சு.. 2023க்குப்பின் அதிக ரன்ஸ் அடிச்ச அவரோட சான்ஸ் முடிஞ்சுதா? ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra 7
- Advertisement -

இலங்கைக்கு எதிராக கொழும்பு நகரில் நடைபெற்ற முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. குறிப்பாக முதல் போட்டியை சமன் செய்த இந்தியா அதற்கடுத்த 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் 27 வருடங்கள் கழித்து முதல் முறையாக இலங்கைக்கு எதிராக இந்தியா ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரில் தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

முன்னதாக அந்தத் தொடரில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் பேட்டிங் வரிசையில் ஏராளமான மாற்றங்களை செய்தது தோல்விக்கு காரணமானது. குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் 2023 உலகக் கோப்பையில் 4 மற்றும் 5வது இடங்களில் களமிறங்கி பெரிய ரன்கள் குவித்து இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினர். ஆனால் அவர்களை இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் கம்பீர் 6, 7 இடங்களில் களறக்கினார்.

- Advertisement -

கேரியர் முடிகிறதா:
அந்த முடிவுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் 3வது போட்டியில் கே.எல் ராகுலை அவர் மொத்தமாக கழற்றி விட்டார். இந்நிலையில் இலங்கை ஒருநாள் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் 4வது பேட்டிங் இடத்தில் வெவ்வேறு வீரர்கள் விளையாடியதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் 2023க்குப்பின் கே.எல் ராகுல் மிடில் ஆர்டரில் அதிக ரன்கள் குவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது அணியிலிருந்தே நீக்கப்பட்டுள்ள கேஎல் ராகுல் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் வருங்கால திட்டத்தில் இல்லையா? என்று ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கே.எல் ராகுல் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இத்தொடரில் 4வது இடத்தில் துபே, வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பண்ட் ஆகிய 3 வெவ்வேறு வீரர்கள் விளையாடினர்”

- Advertisement -

“4வது இடம் சுழலும் கதவு போல இருக்கிறது. நாம் மீண்டும் மீண்டும் அங்கே மாற்றங்களை செய்து கொண்டிருக்கிறோம். ஒருவேளை ராகுல் அங்கே விளையாடுவார் என்றால் ஏன் அவரை ஏழாவது இடத்திற்கு தள்ளினீர்கள்? நாம் ஏன் முன்னணியில் இருந்து போராடவில்லை. முதல் 2 போட்டிகளில் விளையாடிய ராகுல் தற்போது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளார்”

இதையும் படிங்க: சுயநலமற்ற வித்தியாசமானவர்.. விராட் கோலி, ரூட், ஸ்மித் உள்ளிட்ட ஃபேப் 4 வீரர்கள் பற்றி வில்லியம்சன் பேட்டி

“எனவே உங்களுடைய திட்டம் என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். கே.எல் ராகுல் உங்களுடைய திட்டத்தில் இருக்கிறாரா இல்லையா? ஏனெனில் 2023க்குப்பின் உலக ஒருநாள் கிரிக்கெட்டில் 4, 5, 6 இடங்களில் விளையாடிய வீரர்களில் அவரை விட யாரும் அதிக ரன்கள் அடிக்கவில்லை. ஆனாலும் அவர் முதலிரண்டு போட்டிகளுடன் நீக்கப்பட்டுள்ளார்” என்று கூறினார்.

Advertisement