இந்தியாவுக்கு விளையாட தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கனும்ன்னா.. இதை செய்யனும்ன்னு ரோஹித் சொல்லிருக்காரு.. ஓஜா பேட்டி

Pragyan Ojha
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் முதன்மை அணிகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா சர்வதேச 20 ஓவர் போட்டிகளின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. அந்தளவுக்கு தரத்தைக் கொண்டுள்ள இந்திய அணிக்காக தொடர்ந்து ஒரு வீரர் வாய்ப்பு பெற்று விளையாடுவது மிகவும் கடினம் என்றே சொல்லலாம்.

ஏனெனில் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ரஞ்சிக் கோப்பையில் மட்டுமே 30க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடுகின்றன. அந்த அனைத்து அணிகளிலும் விளையாடும் வீரர்கள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்டிருக்கின்றனர். அதனால் அந்த வாய்ப்பு கணிசமான வீரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

- Advertisement -

ரோஹித்தின் அட்வைஸ்:
ஆனால் கடினமாக உழைத்து இந்திய அணியில் அறிமுகமாகும் வீரர்கள் தங்களது இடத்தைக் தக்க வைத்துக்கொள்வது மிகவும் கடினமாகும். ஏனெனில் 21ஆம் நூற்றாண்டில் இந்திய அணியில் ஒரு இடத்திற்கு போட்டியாக 2 – 3 தரமான வீரர்கள் தயாராக உள்ளனர். அதனால் கொஞ்சம் சுமாராக செயல்படும் வீரர்கள் சில போட்டிகளிலேயே நீக்கப்பட்டு அடுத்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பிரக்கியன் ஓஜா இருக்கிறார் என்றே சொல்லலாம். 2011 உலகக் கோப்பைக்கு பின் அதிகமான வாய்ப்புகள் பெற்ற அவர் 24 டெஸ்ட், 18 ஒருநாள், 6 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடினார். இருப்பினும் அந்த வாய்ப்பில் தொடர்ந்து அசத்தத் தவறியதால் அப்போதைய கேப்டன் தோனி அவரை கழற்றி விட்டு அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பளித்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற வேண்டுமெனில் அதற்கு மேட்ச் வின்னராக இருக்க வேண்டுமென ரோஹித் தம்மிடம் சொன்னதாக பிரக்யான் ஓஜா கூறியுள்ளார். இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அண்டர்-19 கிரிக்கெட்டில் விளையாடும் போது ரோஹித் சர்மாவிடம் இருந்து எனக்கு ஒரு சிறந்த அட்வைஸ் கிடைத்தது”

இதையும் படிங்க: வராதீங்கன்னு கவர்னர் சொல்லிட்டாரு.. டிம் ஃபைன் பொய் சொன்னாரு.. அவங்க சண்டை போட்டாங்க.. சர்துள் தாகூர் பேட்டி

“அதாவது இங்கே அனைவரும் நாட்டுக்காக விளையாட முயற்சிக்கின்றனர். நாம் அண்டர்-19 அளவுக்கு வந்துள்ளோம். ஆனால் இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாட வேண்டுமெனில் நீங்கள் மேட்ச் வின்னராக இருக்க வேண்டும் என்று ரோகித் சொன்னார். அதே போல கிறிஸ் கெயிலுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் பந்து வீசுவது எனக்கு மிகவும் கடினம். லெக் ஸ்பின், லெப்ட் ஆர்ம் ஸ்பின் பந்துகளை அவருக்கு எதிராக வீசுவது மிகவும் கடினம். ஆனால் களத்திற்கு வெளியே அவர் மிகவும் ஜாலியான மனிதர்” என்று கூறினார்.

Advertisement