5 வருடம் கழித்து சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பளித்த ரோஹித் பேட்டி.. முதல் ஒன்டே இந்திய பிளேயிங் லெவன் இதோ

Rohit Sharma 5
- Advertisement -

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதனால் புதிய கேப்டன் சூரியகுமார் தலைமையில் டி20 கிரிக்கெட்டில் இந்தியா தங்களது பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகஸ்ட் இரண்டாம் தேதி கொழும்பு நகரில் மதியம் 2.30 மணிக்கு துவங்கியது.

அதில் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடங்கிய இந்திய அணி களமிறங்கியது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மறுபுறம் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக ராகுல் விளையாடுவார் என்று ரோஹித் அறிவித்தார்.

- Advertisement -

இந்திய அணி:
அத்துடன் சிவம் துபே இப்போட்டியில் விளையாடுவதாகவும் ரோகித் சர்மா தெரிவித்தார். இதன் வாயிலாக 5 வருடங்கள் கழித்து சிவம் துபே இந்தியாவுக்காக மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். கடந்த 2019இல் அறிமுகமான அவர் சுமாராக செயல்பட்டதால் அத்தோடு கழற்றி விடப்பட்டார். இருப்பினும் சமீப காலங்களில் சிஎஸ்கே அணியில் சிறப்பாக விளையாடிய அவர் இந்திய டி20 அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

அந்த வாய்ப்பில் நன்றாக விளையாடியதால் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாகி வெற்றியில் பங்காற்றிய துபேவுக்கு தற்போது ஒருநாள் அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் இந்திய அணியின் வருங்கால திட்டம் பற்றி ரோஹித் சர்மா பேசியது பின்வருமாறு. “இது நல்ல பிட்ச். இங்கே நாங்கள் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளதால் இங்குள்ள சூழ்நிலைகள் நன்றாக தெரியும்”

- Advertisement -

“எங்கள் அணியில் நான் விராட் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ், குல்தீப் ஆகியோர் மீண்டும் வந்துள்ளோம். துபேவும் விளையாடுகிறார். அதனால் எங்களுடைய அணியில் நல்ல சமநிலை இருக்கிறது. 2023 உலகக் கோப்பையில் நன்றாக விளையாடியும் நாங்கள் வெற்றிக்கோட்டை தாண்ட முடியவில்லை. ஆனால் நிறைய நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டோம். சுதந்திரமாக விளையாட முடியும் என்ற சூழ்நிலையை எங்களுடைய அணியில் உருவாக்கியுள்ளோம்”

இதையும் படிங்க: இனிமே யாரும் ஷ்ரேயாஸ் ஐயரை ஒருநாள் அணியிலிருந்து நீக்க முடியாது – கம்பீர் எடுத்துள்ள புதிய முடிவு

“நான் பவுலிங் செய்வேனா என்பது தெரியாது. என்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்துகிறேன். ஆனால் பந்து வீசுவதற்கு எங்களுடைய அணியில் நிறைய வீரர்கள் தயாராக இருக்கின்றனர்” என்று கூறினார். முதல் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல் (கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், யாதவ், முகமத் சிராஜ், அர்ஷ்தீப் சிங்

Advertisement