1983 டூ 2024 வரை அவங்க காரணமில்ல.. கெளதம் கம்பீர் பற்றிய நினைப்பை நிறுத்துங்க.. மஞ்ரேக்கர் அதிருப்தி

Sanjay Manjrekar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய அனுபவத்தை கொண்டுள்ளார். அத்துடன் கேப்டனாகவும் ஆலோசகராகவும் ஐபிஎல் கோப்பையையும் வென்ற காரணத்தால் ராகுல் டிராவிட்டுக்குப் பின் அவரை பிசிசிஐ புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளது.

அந்த வகையில் புதிய பயிற்சியாளராக வந்ததும் கௌதம் கம்பீர் புதிய டி20 கேப்டனாக சூரியகுமாரை தேர்ந்தெடுத்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பை உட்பட 2022க்குப்பின் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்பட்டு வந்தார். அதனால் ரோஹித் சர்மா ஓய்வுக்கு பின் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் நினைத்தனர்.

- Advertisement -

ரசிகர்கள் நிறுத்தணும்:
ஆனால் ஃபிட்டாக இல்லை என்று சொல்லி அவரை கழற்றி விட்ட கௌதம் கம்பீர் துணை கேப்டனாக சுப்மன் கில்லை தேர்ந்தெடுத்தது நிறைய முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதே போல இலங்கை டி20 தொடரில் அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரையும் அவர் கழற்றி விட்டது ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்திய அணிக்கு பயிற்சியாளர் தான் வெற்றியை கொடுப்பார் என்று சிந்திப்பதை முதலில் நாம் நிறுத்த வேண்டும் என சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

குறிப்பாக 1983, 2007, 2011, 2024 ஆகிய உலகக் கோப்பைகளில் 1983, 2007 உலகக் கோப்பைகளை இந்தியா ஸ்பெஷலிஸ்ட் பயிற்சியாளர்கள் இல்லாமலேயே வென்றதாக மஞ்ரேக்கர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே யார் பயிற்சியாளராக செயல்படுகிறார் என்பதை தாண்டி இந்திய அணி எப்படி செயல்படுகிறது என்பதில் தான் வெற்றி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆனால் 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தாவுக்கு வென்றதுக் கொடுத்தது போல கெளதம் கம்பீர் இந்தியாவுக்கு உடனடியாக உலகக் கோப்பையை வென்று கொடுப்பார் என்று பலரும் நினைக்கின்றனர். எனவே ரசிகர்களும் ஒளிபரப்பு நிறுவனங்களும் அப்படி நினைத்து கௌதம் கம்பீரை கொண்டாடுவதை நிறுத்த வேண்டுமென்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் சஞ்சய் மஞ்ரேக்கர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: 147 வருடத்தில் இல்லாத உச்சம்.. 90 வருட பரிதாபத்தை உடைத்த ஜிம்பாப்வே கீப்பர்.. மோசமான உலக சாதனை

“இந்தியா 1983, 2007, 2011, 2024 வருடங்களில் உலகக் கோப்பைகளை வென்ற போது முறையே பயிற்சியாளர் இல்லை, லால்சந்த் ராஜ்புட், கேரி கிர்ஸ்டன், ராகுல் டிராவிட் இருந்தனர். எனவே இங்கே அனைத்தும் இந்திய கிரிக்கெட்டை பொருத்ததே தவிர யார் பயிற்சியாளராக இருக்கிறார் என்பதை பொறுத்தது அல்ல. அதனால் இது பயிற்சியாளருக்கும் வெற்றிக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக நினைப்பதை நாம் நிறுத்த வேண்டிய நேரமாகும்” என்று கூறினார்.

Advertisement