இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய பயிற்சியாளராக வந்ததும் ஹர்திக் பாண்டியாவை கழற்றி விட்ட அவர் ரோகித் சர்மாவுக்கு பின் சூரியகுமார் யாதவை டி20 கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். அத்துடன் சுப்மன் கில்லை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ள அவர் அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை இலங்கை டி20 தொடரில் தேர்ந்தெடுக்காதது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இருப்பினும் 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் கேப்டனாகவும் ஆலோசகராகவும் 3 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். அந்த வகையில் பெரிய அனுபவத்தைக் கொண்டுள்ள அவர் பயிற்சியாளராக இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் மிகவும் முதிர்ச்சியான தரமான இந்திய அணி கௌதம் கம்பீருக்கு கிடைத்துள்ளதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
முட்டாள் கிடையாது:
எனவே வீரர்களை பற்றி விரைவில் புரிந்து கொண்டு இந்திய அணியை வெற்றிப்பாதையில் நடக்க வைக்க முடியாத அளவுக்கு கௌதம் கம்பீர் முட்டாள் கிடையாது என்றும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சமகாலத்தைச் சேர்ந்த கௌதம் கம்பீர் ஐபிஎல் தொடரில் சிறந்த சீசனை கொண்டிருந்தார்”
“இளமையாக இருக்கும் அவருக்கு பயிற்சியாளராக செயல்பட இது சரியான வயது என்று நினைக்கிறேன். புதிய யோசனைகளுடன் வரவுள்ள அவர் இந்திய வெள்ளைப்பந்து அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்களை ஐபிஎல் தொடரால் நன்றாக அறிவார். கௌதம் கம்பீர் முட்டாள்தனமான பையன் கிடையாது என்பது நமக்கு தெரியும். அவருக்கும் சொந்த யோசனைகள் இருக்கும். அவருக்கு முதிர்ச்சியான செட்டிலான அணி கிடைத்துள்ளது என்பது நல்ல விஷயம்”
“முதிர்ச்சியடைந்தவராக இருக்கிறோம் என்று நீங்கள் நினைத்தாலும் புதிய யோசனைகளில் இருந்து பயனடையலாம். வீரர்களை சரியாக கையாள்வது ஒரு பயிற்சியாளருக்கு மிகவும் முக்கியமானது. கம்பீர் எப்படி செல்கிறார் என்பதை பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். அவருக்கு கருவிகள், வேலைக்கான பொருட்கள், அனுபவம் போன்ற அனைத்தும் கிடைத்துள்ளன”
இதையும் படிங்க: அவங்க இல்லனா இந்தளவுக்கு வளந்துருக்கவே மாட்டேன்.. பாகுபாடு இல்லாம சான்ஸ் தராங்க.. நடராஜன் பதில்
“இருப்பினும் வீரர்களை அவர் விரைவில் புரிந்து கொண்டு செயல்படுவாரா என்பது கேள்வி. வீரர்களின் பலம் என்ன? எப்படிப்பட்டவர்கள்? எம்மாதிரியான சுபாவம் கொண்டவர்கள்? ஆளுமைகள் என்ன? என்பதை அவர் புரிந்து செயல்பட வேண்டும். அதுவே அவருடைய முக்கிய பணியாக இருக்கும். இருப்பினும் சமகாலத்தவர் என்பதால் அது அவருக்கு பெரிய பிரச்சினையாக இருக்காது. குறிப்பாக வெளியிலிருந்து ஏற்கனவே இந்திய வீரர்களை பார்த்துள்ள அவர் கொல்கத்தா மற்றும் லக்னோ அணியில் ஆலோசகராக இருந்த போதும் இணைந்து விளையாடியுள்ளார்” என்று கூறினார்.



