ஐபிஎல் தொடரில் நடந்த அந்த சம்பவத்தால் தான் பாண்டியா கேப்டன்ஷிப்பை பறிச்சுட்டாங்க.. ரசல் அர்னால்ட் வெளிப்படை

- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. அந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக சூரியகுமார் நியமிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் 2022 ஐபிஎல் கோப்பையை ஹர்திக் பாண்டியா கேப்டனாக குஜராத் அணிக்காக வென்றார்.

அதனால் 2022க்குப்பின் ரோஹித் ஓய்வெடுத்த பெரும்பாலான தொடர்களில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் துணை கேப்டனாக செயல்பட்டு வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதனால் ரோகித் ஓய்வு பெற்றதும் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் சுமாரான ஃபிட்னஸ் காரணமாக பாண்டியா அனைத்து தொடர்களிலும் விளையாடுவதில்லை என்று கருதுகிறார்.

- Advertisement -

ஐபிஎல் காரணம்:
எனவே பாண்டியாவை துணை கேப்டனாக கூட தேர்ந்தெடுக்காத அவர் சூரியகுமார் யாதவை புதிய கேப்டனாகவும் சுப்மன் கில்லை துணை கேப்டனாகவும் தேர்ந்தெடுத்துள்ளார். முன்னதாக 2024 ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அதற்கு மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

அத்துடன் ஜஸ்ப்ரித் பும்ரா, சூரியகுமார் போன்ற முக்கியமான மும்பை வீரர்கள் பாண்டியாவை கேப்டனாக ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. சொல்லப்போனால் அதற்கு ஆதாரமாக களத்தில் நடந்த சில நிகழ்வுகள் பற்றிய வீடியோக்களும் வைரலாகின. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சொந்த அணி ரசிகர்கள் மற்றும் வீரர்களின் மதிப்பை பெறாததே பாண்டியா இந்திய அணியில் கேப்டன்ஷிப் பதவியை இழந்ததற்கு காரணம் என்று முன்னாள் இலங்கை வீரர் ரசல் அர்னால்ட் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாண்டியா சூரியகுமார் இருவருமே சிறப்பான வீரர்கள். சூரியகுமார் உலகிலேயே டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் தன்னை சுற்றியிருந்த அனைவரிடமும் ஹர்திக் பாண்டியாவால் மரியாதையை சம்பாதிக்க முடியவில்லை. அதனாலயே பிசிசிஐ வேறு திசையில் பார்க்கத் தூண்டியிருக்கலாம்”

இதையும் படிங்க:சாக்கு சொல்லாம சர்ட்டிஃபிகேட் கொடுங்க.. இங்க எத்தனையோ பேர் சாதிச்சுருக்காங்க.. அகர்கரை விளாசிய ரசித் லதீப்

“ஏனெனில் கேப்டன்ஷிப் என்பது நீங்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து அமைதியாக மகிழ்ச்சியுடன் வைத்து வெற்றியை நோக்கிய ஒரு பாதையில் நடத்த வேண்டிய வேலையாகும். அது பாண்டியா தலைமையில் நடைபெறவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் இந்த நேரம் சூரியகுமாருக்கு நல்ல சாதகமாகவும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. எனவே இதை பயன்படுத்தி தன்னுடைய வழியில் சூரியகுமார் தத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று கூறினார்.

Advertisement