சாக்கு சொல்லாம சர்ட்டிஃபிகேட் கொடுங்க.. இங்க எத்தனையோ பேர் சாதிச்சுருக்காங்க.. அகர்கரை விளாசிய ரசித் லதீப்

- Advertisement -

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா கழற்றி விடப்பட்டு சூரியகுமார் நியமிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் 2022 ஐபிஎல் கோப்பையை ஹர்திக் பாண்டியா கேப்டனாக முதல் வருடத்திலேயே குஜராத் அணிக்காக வென்றார். அதனால் 2022க்குப்பின் ரோஹித் சர்மா ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 தொடர்களில் பாண்டியா இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார்.

அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பையிலும் துணை கேப்டனாக சிறப்பாக விளையாடிய அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் எனவே ரோஹித் ஓய்வுக்கு பின் அவர் இந்தியாவின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் சுமாரான ஃபிட்னஸ் காரணமாக பாண்டியா அனைத்து தொடர்களிலும் விளையாடுவதில்லை என்று கருதுகிறார்.

- Advertisement -

சாக்கு சொல்லாதீங்க:
எனவே அவரை துணை கேப்டனாக கூட தேர்ந்தெடுக்காத அவர் சூரியகுமார் யாதவை புதிய கேப்டனாகவும் சுப்மன் கில்லை துணை கேப்டனாகவும் தேர்ந்தெடுத்துள்ளார். அத்துடன் உள்ளூர் தொடரில் விளையாடி ஃபிட்னஸ் நிரூபித்தால் மட்டுமே பாண்டியாவுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த முடிவு பல முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஃபிட்டாக இல்லாமல் போயிருந்தால் 2024 ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியாவால் எப்படி முழுமையாக விளையாடியிருக்க முடியும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரசீத் லத்தீப் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே இந்திய தேர்வுக் குழுவினர் ஏதோ ஒரு காரணத்தை சாக்காக சொல்லியுள்ளதாக தெரிவிக்கும் அவர் முடிந்தால் பாண்டியா ஃபிட்டாக இல்லை என்ற சான்றிதழை கொடுங்கள் என சாடியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் இதை ஒரு சாக்காக கூறியுள்ளனர். இதற்கு பேசாமல் அவர்கள் பாண்டியா ஃபிட்டாக இல்லை என்ற சான்றிதழை கொடுக்கலாம். இங்கே சூப்பர் ஃபிட்டாக இல்லாமலேயே பல வீரர்கள் விளையாடி மிகச் சிறந்த கேப்டனாக சாதனை படைத்துள்ளனர். எனவே ஃபிட்னஸ் என்பது ஒரு சாக்கு என்று நான் நினைக்கிறேன்”

இதையும் படிங்க: 163 ரன்ஸ்.. எலிமினேட்டரில் மிரட்டிய டு பிளேஸிஸ்.. அமெரிக்காவில் நடப்பு சாம்பியன் மும்பையை வீட்டுக்கு அனுப்பிய டிஎஸ்கே

“ஏனெனில் ஒருவேளை சூர்யகுமார் இல்லாமல் போயிருந்தால் வருங்காலத்தை பார்க்கும் நீங்கள் ரிஷப் பண்ட்டை கேப்டனாக அறிவித்திருக்க வேண்டும்” என்று கூறினார். அதே போல பாண்டியா ஃபிட்டாக இல்லை என்று சொல்லும் காரணத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த்தும் சமீபத்தில் விமர்சித்திருந்தார். மொத்தத்தில் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி தேர்வுக்குழுவினர் பாண்டியாவை கழற்றி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement