இதை செய்யலன்னா அது உங்கள வருஷத்துக்கு 300 நாள் அழ வெச்சுரும்.. ஷமிக்கு முன்னாள் பாக் வீரர் பதிலடி

Basit Ali 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. இருப்பினும் அந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் பந்தை சேதப்படுத்தி இருக்கலாம் என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் விமர்சித்தார். குறிப்பாக பவர்பிளே போல எப்படி அவரால் 13வது ஓவரிலும் ரிவர்ஸ் ஸ்ஸிங் செய்ய முடிகிறது என்று இன்சமாம் கேள்வி எழுப்பினார்.

எனவே நடுவர்கள் அவரை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும் என்றும் இன்சமாம் கேட்டுக்கொண்டார். ஆனால் ரிவர்ஸ் ஸ்விங் எப்படி ஆகிறது என்பதை புரிந்து கொள்ள கொஞ்சம் மூளையை பயன்படுத்தினாலே போதும் என்று அடுத்த நாளே கேப்டன் ரோஹித் சர்மா பதிலடி கொடுத்தார். அப்போது உலகிற்கே ரிவர்ஸ் ஸ்விங்கை கற்றுக் கொடுத்த எங்களுக்கு நீங்கள் பாடம் சொல்லாதீர்கள் இன்சமாம் பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

300 நாள் அழுவீங்க:
அந்த சூழ்நிலையில் மதிப்புக்குரிய இன்சமாம்-உல்-ஹக் கார்ட்டூன் கேரக்டர் போல அர்ஷ்தீப் பற்றி தெரிவித்த கருத்துக்கள் முட்டாள்தனமானது என முகமது ஷமி நேற்று முன்தினம் புதிய பதிலடி கொடுத்தார். அத்துடன் பாகிஸ்தானுக்கு வந்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடினால் ரிவர்ஸ் ஸ்விங் எப்படி ஆகிறது என்பதை நேரில் செய்து காட்டுகிறேன் என்றும் ஷமி பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் தங்களின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் பற்றி பொதுவெளியில் பேசும் போது மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்தி கவனத்துடன் பேசுமாறு முகமது ஷமிக்கு பாகிஸ்தான் வீரர் பசித் அலி பதிலடி கொடுத்துள்ளார். அதைச் செய்யத் தவறினால் வருடத்தின் 365 நாட்களில் 300 நாட்கள் அழுவீர்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி யூடியூப் பக்கத்தில் பசித் அலி பேசியது பின்வருமாறு. “இன்சமாம் பாய் பற்றி முகமது ஷமி பேசிய போது அவரை கார்ட்டூன் என்றழைத்தார். அது சரியல்ல. இன்சமாம் எங்கள் நாட்டை வழி நடத்தி கேப்டனாக செயல்பட்டவர். ஷமி உங்களின் வார்த்தை தேர்வு நன்றாக இல்லை. நாங்கள் உங்களுடைய பந்து வீச்சை பாராட்டி பேசியிருந்தோம். ஆனால் நீங்கள் உங்களுடைய வார்த்தையை தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும்”

இதையும் படிங்க: 4 ஓவரில் 4 விக்கெட்ஸ்.. அசத்திய சேப்பாக் கில்லீஸ்.. எளிதான வெற்றியை தாரை வார்த்த திருச்சி.. பிளே ஆஃப்க்கு போட்டி

“நீங்கள் உங்களுடைய வார்த்தையை தேர்ந்தெடுக்கவில்லை. அது என்னை காயப்படுத்தியுள்ளது. ஒருவேளை இன்சமாம் பாய் ஏதாவது தவறாக சொன்னதாக நினைத்தால் அதை நீங்கள் நல்லபடியாக சொல்லுங்கள். கார்ட்டூன் என்றழைக்காதீர்கள். சீனியரான அவருக்கு மரியாதை கொடுங்கள். அனைத்து சீனியர்களுக்கும் மரியாதை கொடுங்கள். ஒருவேளை மரியாதை கொடுக்காவிட்டால் கிரிக்கெட் 365 நாட்களில் உங்களை 360 நாட்கள் அழ வைக்கும். 65 நாட்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும். எனவே இதை செய்யாதீர்கள் என்பதே என்னுடைய கோரிக்கை” என்று கூறினார்.

Advertisement