இந்தியாவின் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக பதவி ஏற்ற கௌதம் கம்பீர் இந்திய அணிக்குள் பல மாற்றங்களை கொண்டு வருவார் என்று எதிர்பார்த்த வேளையில் அதற்கு ஏற்றார் போன்றே டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவை நியமித்து அவரது தலைமையின் கீழ் இளம் வீரர்களைக் கொண்ட அணியை கட்டமைத்துள்ளார்.
அதோடு டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் தான் அடுத்த சில ஆண்டுகள் கேப்டனாக பயணிப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக நிச்சயம் அவரது பயிற்சி எவ்வாறு இருக்கிறது என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அதே வேளையில் தற்போது புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கம்பீர் தனக்கு ஏற்றவாறு பயிற்சியாளர் குழுவை அமைக்க வேண்டும் என்று பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டிருந்த வேளையில் அவர் பரிந்துரைத்த பயிற்சியாளர்களையே பிசிசிஐயும் அணியில் இணைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தமிழக வீரர் பாலாஜி, வினய்குமார், ஜாகிர் கான் ஆகியோர் பெயர் பரிசீலனையில் இருந்த வேளையில் மோர்னே மோர்கலுக்கு தான் அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கூறயிருந்தால் அவர் கூறியது போன்றே தற்போது இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று இந்திய அணியின் துணை பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரயன் டென் டெஸ்கோத்தே போன்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படி இந்திய அணிக்கு துணைப் பயிற்சியாளர்கள் அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை.
இதையும் படிங்க : 4 ஓவரில் 4 விக்கெட்ஸ்.. அசத்திய சேப்பாக் கில்லீஸ்.. எளிதான வெற்றியை தாரை வார்த்த திருச்சி.. பிளே ஆஃப்க்கு போட்டி
கம்பீர் ஏற்கனவே கூறிய சில நிபந்தனைகளுக்கு உட்பட்ட பி.சி.சி.ஐ அவர் கேட்டவாரே பயிற்சியாளர் குழுவையும் நியமித்துள்ளது. எதிர்வரும் இரண்டு ஐ.சி.சி கோப்பையை குறி வைத்து கம்பீர் இது போன்ற முக்கிய மாற்றங்களை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



