140 கூட 150 கி.மீ மாதிரி தெரியும்.. இதனால் தான் பும்ராவை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் கஷ்டப்படுறாங்க.. கபில் தேவ்

Kapil Dev 4
- Advertisement -

ஜஸ்ப்ரித் பும்ரா நவீன கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக வித்தியாசமாக ஓடி வந்து வீசக்கூடிய அவருடைய பவுலிங் ஆக்சன் மற்ற பவுலர்களை காட்டிலும் மிகவும் தனித்துவமாக இருக்கிறது. அதை பயன்படுத்தி அதிரடியான வேகத்தில் துல்லியமாக வீசும் அவர் உலகின் பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக திகழ்ந்து இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

குறிப்பாக ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் தேவைப்படும் போதெல்லாம் விக்கெட்டுகளை எடுத்த அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினர். அதிலும் குறிப்பாக மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது இந்தியா மீண்டும் தோல்வியடையும் என எதிர்பார்த்ததாக விராட் கோலி சமீபத்தில் தெரிவித்தார்.

- Advertisement -

விளக்கிய ஜாம்பவான்:
இருப்பினும் அப்போது 16, 18வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்த பும்ரா இந்தியா கம்பேக் கொடுத்து வெற்றி பெற வைத்ததாக விராட் கோலி கூறியிருந்தார். அந்த வகையில் உலகின் 8வது அதிசயமான பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்றும் விராட் கோலி பாராட்டியிருந்தார். மொத்தத்தில் 2024 டி20 உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை 4.17 என்ற எக்கனாமியில் எடுத்த பும்ரா இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

அதனால் தொடர்நாயகன் விருதையும் வென்ற அவர் தற்சமயத்தில் உலகின் நமபர் ஒன் பவுலராக திகழ்வதாக வாசிம் அக்ரம், பிரட் லீ ஆகியோர் பாராட்டியிருந்தனர். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா 140 கி.மீ வேகத்தில் வீசினாலும் அது பேட்ஸ்மேன்களுக்கு 150 கிலோமீட்டர் போல தெரியுமென்று ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பும்ரா 140 கி.மீ வேகத்தில் பந்து வீசலாம். ஆனால் அதை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன் அது கிட்டத்தட்ட 150 கி.மீ வேகத்தில் வருவது போல தெரியும். இதற்கான காரணம் என்னவெனில் பும்ரா பந்தை தாமதமாக ரிலீஸ் செய்கிறார். அவர் தனது பந்துக்கு தகுந்தாற்போல் அட்ஜஸ்ட் செய்ய பேட்ஸ்மேன்களுக்கு குறைந்த நேரத்தை மட்டுமே கொடுக்கிறார்”

இதையும் படிங்க: டிராவிட் மாதிரி கிடையாது.. பும்ராவை தவிர விராட், ரோஹித்துக்கு சலுகையில்லை.. கம்பீர் அதிரடி அறிவிப்பு

“அதனாலேயே கடைசியில் அவருடைய பந்துகள் 150 கிலோமீட்டர் வேகத்தில் வருகிறது என்ற உணர்வு ஏற்படுகிறது. பேட்ஸ்மேன்கள் அந்த வேகத்தை சமாளிக்க வேகமாக ரியாக்சன் செய்ய வேண்டும்” என்று கூறினார். முன்னதாக தம்மை விட ஜஸ்ப்ரித் பும்ரா 1000 மடங்கு சிறந்தவர் என்று கபில் தேவும் சமீபத்தில் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement