இந்த விடயத்தை சரி பண்ணா போதும்.. ஆப்கானிஸ்தான் அணியை அடிச்சிக்க ஆள் இல்ல – ஆப்கன் கோச் டிராட்

Trott
- Advertisement -

வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஐசிசி 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்று வரை முன்னேறி அசத்தியிருந்தது. முக்கியமான அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 56 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானதன் காரணமாக அந்த அணி அந்த தொடரில் இருந்து வெளியேறியது.

இருப்பினும் பெரிய அணிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி இவ்வளவு தூரம் வந்தது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வருகிறது. என்னதான் ஆப்கானிஸ்தான் அணியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் செய்யும் சொதப்பலே அந்த அணியின் சறுக்களுக்கு மிக முக்கியமான காரணமாக மாறியுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக பேட்டிங் துறையில் முன்னேற்றத்தை காண வேண்டும் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : அரையிறுதி போட்டியில் நாங்கள் நம்பிக்கையுடன் வந்தோம். ஆனால் பலமான தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக எங்களால் பெரிய அளவில் நல்லதொரு சவாலை கொடுக்க முடியவில்லை. அது எனக்கு மிகவும் ஏமாற்றம் தருகிறது.

ஆனாலும் நான் எனது அணியின் வீரர்களை நினைத்து பெருமை கொள்கிறேன். நாங்கள் எந்த விஷயத்தில் முன்னேற வேண்டும் என்ற கவனத்தை செலுத்த வேண்டும். அந்த வகையில் என்னென்ன முன்னேற்றங்களை காண வேண்டும் என்பதை ஏற்கனவே நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

- Advertisement -

அந்த வகையில் மற்ற அணிகளுக்கு இணையாக சவால் அளிக்கக்கூடிய அளவிற்கு பேட்டிங் துறையில் நாங்கள் முன்னேற வேண்டும். எங்களுக்காக பேட்டிங்கில் ஆட்டத்தை வென்று கொடுக்கக்கூடிய வீரர்களை கண்டறிய வேண்டும். அப்படி செய்து விட்டால் நிச்சயம் ஆப்கானிஸ்தான் அணி அடுத்த கட்டத்திற்கு செல்லும். இந்த உலகக் கோப்பை தொடரில் குர்பாஸ் மற்றும் இப்ராஹீம் ஜத்ரான் ஆகியோர் நல்ல துவக்கம் கொடுத்தனர்.

இதையும் படிங்க : 51 ரன்ஸ்.. நடராஜன் அசத்தல் கம்பேக்.. சேலத்தை நாக் அவுட்டாக்கி வீட்டுக்கு அனுப்பிய திருப்பூர்.. வெற்றியுடன் ஏற்றம்

மற்றபடி மிடில் ஆர்டரில் பெரியதாக சிறப்பான செயல்பாடு இல்லை. அந்த ஒரு குறையை தீர்த்தாக வேண்டிய அவசியம் உள்ளது. எங்கள் அணியில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் இருக்கிறார்கள். அதே போன்று பேட்ஸ்மேன்களை கண்டறிந்து விட்டால் நிச்சயம் ஆப்கானிஸ்தான் அணி மற்ற அணிகளுக்கு நிகராக மாறும் என டிராட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement