45 நிமிடத்தில் 10 விக்கெட்.. 3.5 நாள் வெ.இ போராட்டத்தை ஒரே செஷனில் முடித்த இங்கிலாந்து வெற்றி.. சோயப் பசீர் 2 சாதனை

ENG vs WI 22
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அந்த சூழ்நிலையில் ஜூலை 18ஆம் தேதி ட்ரெண்ட் பிரிட்ஜ் நகரில் துவங்கிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து சிறப்பாக விளையாடி 416 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஓலி போப் சதமடித்து 121, பென் டக்கெட் 71, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அற்புதமாக பேட்டிங் செய்து 457 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது.

- Advertisement -

மிரட்டல் வெற்றி:
அந்த அணிக்கு அதிகபட்சமாக காவெம் ஹோட்ஜ் சதமடித்து 120, அலிக் அதனேஷ் 82, ஜோஸ்வா டா சில்வா 82* ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 41 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து மீண்டும் அபாரமாக பேட்டிங் செய்து 425 ரன்கள் குவித்து அசத்தியது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜோ ரூட் சதமடித்து 122, ஹரி ப்ரூக் சதமடித்து 109, பென் டக்கெட் 76 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் 385 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் போராடி வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு தகுந்தார் போல் துவக்க வீரர்கள் கேப்டன் ப்ரத்வெய்ட் 47, லூயிஸ் 17 ரன்கள் எடுத்ததால் 61/0 என்ற நல்ல துவக்கத்தை வெஸ்ட் இண்டீஸ் பெற்றது.

- Advertisement -

ஆனால் அப்போது அனலாக பந்து வீசிய கிறிஸ் ஓக்ஸ் துவக்க வீரர்களை அவுட்டாக்கினார். அடுத்ததாக வந்த மெக்கன்சி 1, அலிக் அதனேஷ் 1, காவெம் ஹோட்ஜ் 0 ரன்களில் சோயப் பசீர் சுழலில் அவுட்டாகி மொத்தமாக கைவிட்டனர். அதே போல லோயர் மிடில் ஆர்டரில் கெவின் சின்க்லைர் 1, ஜோஸ்வா டா சில்வா 14 ரன்களில் அவுட்டாகி கை கொடுக்க தவறிய நிலையில் எதிர்புறம் போராடிய ஜேசன் ஹோல்டரும் 37 ரன்களில் அவுட்டானார்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸை 143 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இங்கிலாந்து 241 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குறிப்பாக முதல் போட்டியில் தோற்றதால் இப்போட்டியில் உண்மையாகவே வெஸ்ட் இண்டீஸ் கடுமையாக போராடி மூன்றரை நாட்கள் வெற்றியை சமமாக வைத்திருந்தது. ஆனால் 4வது நாள் உணவு இடைவெளிக்கு பின் அனலாக செயல்பட்ட இங்கிலாந்து 45 நிமிடத்தில் 10 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியைப் பறித்து 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரையும் வென்றுள்ளது.

இதையும் படிங்க: இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியளரான மோர்னே மோர்கல் இலங்கை தொடரில் இருந்து விலகல் – காரணம் இதுதான்

அந்த அணிக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் மிகவும் இளம் (20) வயதில் 5 விக்கெட் ஹால் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார். அத்துடன் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் முத்தையா முரளிதரனுக்கு (2006இல் இங்கிலாந்துக்கு எதிராக) பின் 5 விக்கெட்டுகள் எடுத்த ஸ்பின்னர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

Advertisement