வெஸ்ட் இண்டீஸ் அணியை பந்தாடி அசத்தலான சாதனையை நிகழ்த்திய இங்கிலாந்து வீரர் – விவரம் இதோ

Brook
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது தற்போது அந்த அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஜூன் மாதம் ஆரம்பத்தில் துவங்கிய இந்த தொடரானது ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறும் வகையில் அட்டவணை படுத்தப்பட்டிருந்தது.

அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றிருந்த வேளையில் அந்த போட்டியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

அந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் தங்களது முன்னிலையை வலுவாக பதிவு செய்திருந்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 416 ரன்களை குவித்தது. பின்னர் தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் அவர்களுக்கு சற்றும் சலைக்காமல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது முதல் இன்னிங்சில் 457 ரன்களை குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக 41 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது தற்போது நான்காம் நாள் ஆட்டநேரத்தில் இதுவரை 7 விக்கெட்டுகளை இழந்து 378 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி ப்ரூக் 132 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 109 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2024 : 201 ரன்ஸ்.. ரிச்சா வரலாற்று சாதனை.. மாபெரும் சாதனையுடன் அமீரகத்தை வீழ்த்திய இந்தியா

அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் அசத்தலான ஒரு சாதனையும் நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் இதுவரை 23 இன்னிங்சில் விளையாடியுள்ள ஹாரி ப்ரூக் இங்கிலாந்து அணிக்காக ஐந்தாவது சதத்தை அடித்துள்ளார். அதோடு சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் அவர் அடிக்கும் முதல் சதமாக இது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement