தோனிக்கு மாற்று வீரராக சி.எஸ்.கே அணிக்கு போகப்போகும் வீரர் இவர்தான் – வெளியான தகவல்

MSD
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரோடு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி ரசிகர்களின் அன்புக்காகவும், பாசத்திற்காகவும் மேலும் ஒரு ஆண்டு விளையாட இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2025-ஐபிஎல் தொடருடன் அவர் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.

தற்போது 43 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மகேந்திர சிங் தோனி இந்த தொடருடன் வெளியேறுவது சென்னை அணிக்கு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும். அந்த இடத்தினை நிரப்பப்போகும் வீரர் யார்? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

இத்தகைய சூழலில் தோனி சென்னை அணியை விட்டு வெளியேறும் போது அவரது இடத்தை ரிஷப் பண்ட் தான் நிரப்புவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி : மும்பை அணியின் கேப்டன் மாற்றத்திலிருந்து ரோகித் சர்மா அந்த நிர்வாகத்திடம் இருந்து வெளியேறும் முடிவுவில் இருக்கிறாராம்.

அதேபோன்று ரோகித் சர்மாவுடன் நெருக்கமாக இருக்கும் சூரியகுமார் யாதவும் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. அப்படி வெளியேறும் ரோகித் சர்மாவை பெங்களூரு அணி வாங்கலாம் என்றும் சூரியகுமார் யாதவை கொல்கத்தா அணி வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் நிர்வாகம் ரிஷப் பண்டிடம் மகிழ்ச்சி அடையவில்லை என்பதால் அவரும் டெல்லி அணியை விட்டு வெளியேறி விடுவார் என்றும் அதே வேளையில் அப்படி வெளியேறும் ரிஷப் பண்ட் தோனிக்கு சரியான மாற்றுவீரராக சி.எஸ்.கே அணிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க : ரொம்ப சிம்பிள்.. பாகிஸ்தானுக்கு வரலன்னா இந்தியா இந்த விளைவை சந்திக்கும்.. ஹசன் அலி எச்சரிக்கை

இப்படி வெளியான தகவலின் படி ரிஷப் பண்ட் சி.எஸ்.கே அணிக்கு மாறும் பட்சத்தில் அது நிச்சயம் நல்ல மாற்றமாகவே இருக்கும். இருந்தாலும் தொடர்ச்சியாக சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தான் நீடிப்பார் என்றும் தெரிகிறது.

Advertisement