சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷிவம் துபே கடந்த சில ஆண்டுகளாக அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் வேளையில் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை எளிதாக அடிக்கும் அவரது திறன் அனைவரது மத்தியிலும் பாராட்டப்பட்டது. அதன் காரணமாகவே அவருக்கு 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
நடைபெற்று முடிந்த இந்த டி20 உலககோப்பையில் அவர் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை என்றாலும் இறுதிப்போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு மட்டுமின்றி பகுதிநேர வேகப்பந்து வீச்சாளராகவும் செயல்படும் திறமை கொண்டவர் என்பதனால் அவருடைய பங்களிப்பு என்பது இந்திய அணிக்கு தற்போது முக்கிய தேவையாகவும் மாறியுள்ளது.
ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா மட்டுமே வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இருந்து வருகிறார். அதோடு அடிக்கடி காயம் காரணமாக பாண்டியா அணியில் இருந்து வெளியேறி வருவதால் அவருக்கு பதிலாக அந்த இடத்தை நிரப்ப சரியான ஆள்ரவுண்டர் இதுவரை கிடைக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் அந்த குறையை போக்குவதற்காகவே ஷிவம் துபேவை இந்திய அணி நிர்வாகம் தயார் செய்து வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் ஷிவம் துபே அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின்னர் மோசமான செயல்பாடு காரணமாக வெளியேற்றப்பட்ட அவர் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார்.
இப்படி மீண்டும் அவருக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்க காரணம் யாதெனில் : இனி பாண்டியாவை மட்டும் நம்பியிருக்கக்கூடாது என்றும் அவரைப்போன்று வேகப்பந்துவீச்சு தெரிந்த ஒரு ஆல்ரவுண்டர் வேண்டும் என்ற காரணத்தினாலே தற்போது பிசிசிஐ துபேவுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : என்னிடம் இன்னும் எதிர்பார்க்கிறீர்கள்? 2019-ல் ஏற்பட்ட சம்பவம் குறித்த தனது ஏமாற்றத்தை பகிர்ந்த – முகமது ஷமி
மேலும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஹார்டிக் பாண்டியா ஓய்வு எடுத்துக் கொண்டதன் காரணமாக அவரது இடத்தை நிரப்பவே துபே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த தொடரில் தனது சிறப்பான செயல்பாட்டை நிரூபித்தால் இனிவரும் காலங்களில் டி20 மற்றும் ஒருநாள் என 2 வகையான இந்திய அணியிலும் தவிர்க்க முடியாத வீரராக சேர்ந்து மாறுவார் என்பது உறுதி.



