இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி பி.சிசி.ஐ மூலம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ஓய்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பிடித்துள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதன் காரணமாக ரோஹித் சர்மா, கோலி ஆகியோர் இந்திய அணியில் விளையாடுவது உறுதி ஆகியுள்ளது. இந்நிலையில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் கம்பீருக்கும் விராட் கோலிக்கும் இடையேயான உறவு எவ்வாறு இருக்கப் போகிறது என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
ஏனெனில் ஏற்கனவே பலமுறை ஐபிஎல் போட்டிகளின் போது கம்பீரும், விராட் கோலியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவங்களும், காரசாரமான வார்த்தைகளை பரிமாறிக் கொண்ட சம்பவமும் நடைபெற்றதால் இருவரும் ஒன்றாக இணைந்து எப்படி பணியாற்ற போகிறார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் கௌதம் கம்பீருடன் பணியாற்றுவதில் எவ்வித பிரச்சனையும் கிடையாது என்று விராட் கோலி பிசிசிஐ-இடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கம்பீருடன் இணைந்து தான் பணியாற்ற எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும் இந்திய அணிக்காக விளையாடுவது தான் முக்கியமான ஒன்று கூறியுள்ளாராம்.
கடந்த காலங்களில் ஐபிஎல் போட்டிகளின் போது ஏற்பட்ட கசப்பான மோதல்களை நாங்கள் இந்திய அணிக்குள் கொண்டு வர மாட்டோம் என்றும் வீரர்களின் ஓய்வறையில் இந்திய அணியின் வெற்றி மட்டுமே முக்கியம் என்றும் விராட் கோலி கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பாபாருக்கு இந்திய அணியில் இடமே கிடைக்காது.. அவங்க சொன்னதும் ரோஹித் செஞ்சதை பாருங்க.. சோயப் மாலிக்
இருவரும் நாட்டின் நலனுக்காக செயல்படுவதை அங்கீகரிக்கிறோம். முந்தைய கருத்து வேறுபாடுகளிலிருந்து முன்னேற தயாராக உள்ளோம் என இருதரப்பினரும் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.



