ஜடேஜாவின் ஒருநாள் கேரியரும் முடிகிறதா? தமிழக வீரரை வைத்து திட்டத்தை ஆரம்பித்த கம்பீர்.. வெளியான தகவல்

Ravindra Jadeja
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பின் நடைபெற்ற ஜிம்பாப்வே தொடரிலும் வெற்றி கண்ட இந்தியா அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு நடைபெறும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்தியா விளையாட உள்ளது. அந்தத் தொடர்களுக்கான 2 இந்திய அணியும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ஓய்வு பெற்ற ரோகித் சர்மாவுக்கு பின் டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மறுபுறம் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா சாதாரண வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது. ஆனால் அந்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் ஷர்மா ஆகியோர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

முடியும் ஒருநாள் கேரியர்:
அத்துடன் ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் கழற்றி விடப்பட்டுள்ளார். அதே போல நட்சத்திர சீனியர் வீரர் ரவீந்திர ஜடேஜாவும் அந்த அணியில் தேர்வு செய்யப்படவில்லை. தோனியின் வளர்ப்பான ஜடேஜா கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக செயல்பட்டு வந்தார்.

இருப்பினும் சமீப காலங்களில் டி20 கிரிக்கெட்டில் தடுமாறி வந்த அவர் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ஓய்வு பெற்றார். அதே சமயம் ரோஹித், விராட் போல ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜாவும் தொடர்ந்து விளையாடுவார் என்று பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 35 வயதாகும் ரவீந்திர ஜடேஜாவை ஒருநாள் கிரிக்கெட்டிலும் கழற்றி விட புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -

குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரை சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது பற்றி பிசிசிஐ நிர்வாகி பேசியது பின்வருமாறு. “சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன் 6 ஒருநாள் போட்டிகள் மட்டுமே இருக்கிறது. அதில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோருக்கு அதிக வாய்ப்பு கொடுக்க தேர்வாளர்கள் விரும்புகின்றனர்”

இதையும் படிங்க: இலங்கை அணிக்கெதிரான தொடரில் அவங்க 3 பேருக்கு ஏன் சேன்ஸ் தரல – ரசிகர்கள் ஆதங்கம்

“ரவீந்திர ஜடேஜாவின் செயல்பாடுகளில் எந்த குறையுமில்லை. ஆனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு புதிய அணியை உருவாக்க வேண்டியிருப்பதால் நிர்வாகம் மற்ற விருப்பங்களை பார்க்க விரும்புகிறது. இப்போதும் ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்படுகிறார். குறிப்பாக சொந்த மண்ணில் அவரை ஈடு செய்ய முடியாது. எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு ஜடேஜா முக்கியம்” என்று கூறினார். இதிலிருந்து ஜடேஜாவின் ஒருநாள் கேரியரும் முடிய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement