டென்ஷன் இருந்ததை பாத்தேன்.. டெல்லி பயிற்சியாளராக பாண்டிங் விலகியது ஏன்? பின்னணியை பகிர்ந்த ஹீலி

Alyssa Healy
- Advertisement -

டெல்லி கேப்பிடல்ஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் விடை பெற்றுள்ளார். சொல்லப்போனால் டெல்லி அணி நிர்வாகம் அவரிடமிருந்து விலகிச் செல்வதாக அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்காக 2 உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த மகத்தான கேப்டனான ரிக்கி பாண்டிங் 2018ஆம் ஆண்டு டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அடுத்த சில வருடங்களிலேயே முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் சௌரவ் கங்குலியும் டெல்லி அணியின் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த வகையில் 2003 உலகக்கோப்பை ஃபைனலில் மோதிய 2 முன்னாள் ஜாம்பவான் கேப்டன்கள் முக்கிய பொறுப்பேற்றதால் டெல்லி வெற்றி நடை போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர்களுடைய வழிகாட்டுதலில் அதிகபட்சமாக 2020 ஐபிஎல் தொடரின் ஃபைனலுக்கு முதல் முறையாக டெல்லி தகுதி பெற்றது.

- Advertisement -

விலகிய காரணம்:
அதைத் தவிர்த்து எஞ்சிய வருடங்களில் டெல்லி அணி தடுமாற்றமாகவே செயல்பட்டது. அந்த வகையில் 7 வருடங்களாகியும் கோப்பையை வெல்லாததால் அதிருப்தியடைந்த டெல்லி நிர்வாகம் வேறு பயிற்சியாளரை நியமிப்பதற்காக ரிக்கி பாண்டிங்கிடமிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து சௌரவ் கங்குலி புதிய தலைமை பயிற்சியாளராக வருவதற்கு விரும்புவதாக தெரிகிறது.

ஆனால் இதுவரை அவரும் டெல்லி அணியில் இயக்குனராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே அவருக்கு பதிலாக வேறு ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. இந்நிலையில் டெல்லி அணியில் உள்ள சில வீரர்களுக்கும் துணை பயிற்சியாளர்களுக்கும் ரிக்கி பாண்டிங்கிற்கும் இடையே பதற்றமிருந்ததாக ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் அலிசா ஹீலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதை 2024 மகளிர் ஐபிஎல் தொடரில் யூபி அணிக்காக தாம் கேப்டனாக செயல்பட்ட போது பார்த்ததாக அவர் கூறியுள்ளார். அத்துடன் ஒரு இந்திய நட்சத்திரத்துடன் வெளிநாட்டவர் வேலை செய்ய முடியாது என்பதால் பாண்டிங் வெளியேறியிருக்கலாம் என்று தெரிவிக்கும் ஹீலி இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த வருடம் இந்தியாவில் இருந்ததால் அதை நேரலையில் பார்த்தேன். இந்திய கண்ணோட்டத்தில் டெல்லி அணியில் அது சரியாக தெரியவில்லை”

இதையும் படிங்க: 4.2 ஓவரில் 50.. வெ.இ அணியை துவம்சம் செய்து.. 147 வருட வரலாற்றை மாற்றி எழுதிய இங்கிலாந்து.. புதிய உலக சாதனை

“துணை பயிற்சியாளர்கள் அல்லது சில வீரர்களிடையே பதற்றம் இருந்தது. ரிஷப் பண்ட் பொறுப்பாகவும் நிதானமாகவும் காணப்பட்டார். ஆனால் மற்றவர்கள் சரியாக தெரியவில்லை. ஒரு இந்திய நட்சத்திரத்திற்கு எதிராக ஒரு சர்வதேச பயிற்சியாளரை நீங்கள் போடும் போது அந்த சர்வதேச பயிற்சியாளர் வெளியேறினால் அது எனக்கு ஆச்சரியமில்லை” என்று கூறினார்.

Advertisement