4.2 ஓவரில் 50.. வெ.இ அணியை துவம்சம் செய்து.. 147 வருட வரலாற்றை மாற்றி எழுதிய இங்கிலாந்து.. புதிய உலக சாதனை

ENG vs WI 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்த தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தெறிக்க விட்ட இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

அந்த வெற்றியுடன் இங்கிலாந்து ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பிரியமானதுடன் ஓய்வு பெற்றார். குறிப்பாக 188 போட்டிகளில் 704 விக்கெட்டுகளுடன் விடைபெற்ற அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடி அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக இரட்டை உலக சாதனையுடன் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது போட்டி ஜூலை 18ஆம் தேதி துவங்கியது.

- Advertisement -

உலக சாதனை:
ட்ரெண்ட் பிரிட்ஜ் நகரில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே அல்சாரி ஜோசப் வேகத்தில் ஜாக் கிராவ்லி டக் அவுட்டானார். ஆனால் அவருக்கும் சேர்த்து மற்றொரு துவக்க வீரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாடினார்.

அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஓலி போப் நிதானமாக விளையாடி கை கொடுத்தார். ஆனால் இந்த பக்கம் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை பென் டக்கெட் அடித்து நொறுக்கியதால் வெறும் 4.2 ஓவரில் 26 பந்துகளில் இங்கிலாந்து 50 ரன்கள் தொட்டது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதமடித்த அணி என்ற தங்களின் சொந்த சாதனையை உடைத்த இங்கிலாந்து புதிய உலக சாதனை படைத்தது.

- Advertisement -

கடந்த 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசியாக 1994ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 4.3 ஓவரில் இங்கிலாந்து 50 ரன்கள் அடித்து சாதனை படைத்திருந்தது. தற்போது அந்த வரலாற்றை ஒரு பந்து குறைவாக மாற்றி எழுதியுள்ள இங்கிலாந்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: எனக்கு மட்டுமல்ல.. மொத்த இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் அது தான் காரணம்.. சிவம் துபே பேட்டி

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அதிரடியாக விளையாடிய டக்கெட் அரை சதமடித்து 71 (59) ரன்களில் அல்சாரி ஜோசப் வேகத்தில் ஆட்டமிழந்தார். அதனால் முதல் நாள் உணவு இடைவெளியில் இங்கிலாந்து 134/2 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஓலி போப் 47*, ஜோ ரூட் 13* ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

Advertisement