முன்னாடி எரிச்சலா இருக்கும்.. ஆனா இப்போ அவரை பாத்தா சந்தோஷமா இருக்கு – சஞ்சு சாம்சன் குறித்து அபினவ் முகுந்த் கருத்து

Abhinav
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்தே ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். மிக இளம் வயதிலேயே மிகத்திறமை வாய்ந்த வீரராக பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் கடந்த 2015-ஆம் ஆண்டே அதாவது 9 ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் இதுவரை இந்திய அணிக்காக வெறும் 44 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பதே கசப்பான உண்மை. ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் உள்ளூர் போட்டிகள் என தனது திறமை பலமாக அவர் நிரூபித்திருந்தாலும் இதுவரை சர்வதேச போட்டியில் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்து வருவது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.

ஏனெனில் சஞ்சு சாம்சன் போன்ற ஒரு வீரர் தனது திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் அவருக்கான தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றளவும் தனது வாய்ப்பிற்காக சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக போராடி வருகிறார். அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அணியில் ஒரு வீரராக இருந்து வந்தார்.

- Advertisement -

அதேபோன்று டி20 உலக கோப்பை தொடர் முடிந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரின் போதும் வாய்ப்பை பெற்ற அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பில் மிகச்சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளதால் இனியாவது சஞ்சு சாம்சனுக்கு நிரந்தர இடம் கிடைக்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 29 வயதான சஞ்சு சாம்சன் ஜிம்பாப்வே அணிக்கெதிரான கடைசி போட்டியின் போது விளையாடிய விதம் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது என தெரிவித்து இதுகுறித்து பேசியிருந்த தமிழக வீரரும், முன்னாள் இந்திய வீரரான அபினவ் முகுந்த் கூறியதாவது : சஞ்சு சாம்சனிடம் அளவுக்கு அதிகமான திறமை இருந்தும் அவர் சில சமயங்களில் நம்மை எரிச்சல் அடையும் வைக்கும் அளவிற்கு சில மோசமான இன்னிங்ஸ்களை விளையாடுவார்.

- Advertisement -

ஆனால் தற்போது கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பக்குவமான இன்னிங்க்ஸை விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் சூப்பர் ஸ்டார் வீரர்களுடனும் விளையாடி இருக்கிறார். அதே போன்று இளம் வீரர்களுடன் விளையாடி இருக்கிறார். அது அவருக்கு நிறைய பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் தற்போது இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இதையும் படிங்க : என்ன இருந்தாலும் இனி அவர் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட முடியாது – ஜார்ஜ் பெய்லி கருத்து

அதனை புரிந்து கொண்ட அவர் தற்போது பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் கடினமான சூழ்நிலையில் இருந்து இந்திய அணியை மீட்டெடுத்து இருக்கிறார். இனி அவர் நிச்சயம் தான் விட்ட இடத்தை பிடிக்காமல் விடமாட்டார் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு தொடரிலும் அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான போட்டியில் இருப்பதை உணர்த்திக் கொண்டே இருக்கிறார் என சஞ்சு சாம்சன் குறித்து அபினவ் முகுந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement