விமர்சித்த பின் நடவடிக்கை.. 1 கோடியை வெளியிட்ட ஜெய் ஷா.. கபில் தேவுக்கு நன்றி சொல்லும் ரசிகர்கள்

Jay Shah 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். 1980களில் இந்தியாவுக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 90களின் இறுதியில் பயிற்சியாளராகவும் செயல்பட்டார். மேலும் ஓய்வுக்கு பின் 2017 – 2019 காலகட்டங்களில் பிசிசிஐ நிர்வாகத்தில் மிகவும் முக்கிய பங்காற்றிய அவர் தற்சமயத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்.

இருப்பினும் தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளதால் தமக்கு கொஞ்சம் உதவி செய்யுமாறு அவருடைய சார்பில் பிசிசிஐக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிசிசிஐ செவி சாய்க்கவில்லை. அந்த சூழ்நிலையில் 2024 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த பிசிசிஐ அவருக்கு உதவி செய்ய வேண்டும் என திலிப் வெங்சர்க்கார் கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

கபில் தேவ் பவர்:
ஆனால் அப்போதும் பிசிசிஐ எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. அந்த சூழ்நிலையில் 1980களில் இல்லாத பணம் தற்போது பிசிசிஐயிடம் இருப்பதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்தார். எனவே முன்னாள் வீரர்களுக்காக ஒரு அறக்கட்டளையை உருவாக்கி அக்கறை காட்ட வேண்டிய பிசிசிஐ அதை செய்யவில்லை என்று கபில் தேவ் விமர்சனத்தை முன்வைத்தார்.

அத்துடன் இந்தியாவுக்காக விளையாடிய அனுஷ்மான் அவர்களின் மருத்துவ உதவிக்காக தம்முடைய பென்ஷன் தொகையை கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கபில் தேவ் அறிவித்தார். அது போக சுனில் கவாஸ்கர், மதன் லால் உள்ளிட்ட முன்னாள் வீரர்களின் குடும்பம் அனுமதிக்கும் பட்சத்தில் அவர்களுடைய பென்சன் தொகையை மருத்துவ உதவிக்கு கொடுக்க முன்வருமாறு கபில் தேவ் கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

இந்நிலையில் அனுஷ்மான் கெய்க்வாட் அவர்களின் மருத்துவ செலவுக்கு ஒரு கோடி ரூபாய் உதவி செய்வதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது பின்வருமாறு. “மிஸ்டர் அனுஷ்மான் கெய்க்வாட் அவர்களின் மருத்துவ உதவியாக உடனடியாக ஒரு கோடி ரூபாயை கொடுக்க ஜெய் ஷா பிசிசிஐ’யை அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவரின் குடும்பத்துடன் பேசிய ஜெய் ஷா தம்முடைய ஆதரவை தெரிவித்தார்”

இதையும் படிங்க: நெஞ்சில் வஞ்சம்? தோனிக்கு இடமில்லை.. தனது ஆல் டைம் அணியை வெளியிட்ட யுவராஜ்.. 3 இந்தியருக்கு இடம்

“கடினமான சூழ்நிலையில் கெய்க்வாட் மற்றும் அவருடைய குடும்பத்திற்கும் பிசிசிஐ ஆதரவாக நிற்கிறது. இந்த சூழ்நிலையில் இருந்து அவர் வலுவாக திரும்புவார் என்று நம்புகிறோம்” எனக் கூறியுள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் கபில் தேவுக்கு நன்றி தெரிவித்து கெய்க்வாட் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவிக்கின்றனர். ஏனெனில் கபில் தேவ் விமர்சித்த காரணத்தாலேயே அது தலைப்புச் செய்தியாக வந்தது. அதனாலேயே தற்போது பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement