மாறாத 5.. 2007 ஃபைனலை ரிப்பீட் செய்த இந்தியா சாம்பியன்.. 17 வருடம் கழித்தும் பாகிஸ்தானுக்கு நேர்ந்த பரிதாபம்

IND vs PAK Final
- Advertisement -

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஜூலை 13ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 9:00 மணிக்கு உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதின.

அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் சாம்பியன்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஷார்ஜீல் கான் 12 (10) ரன்னில் அனுரீத் சிங் வேகத்தில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த சோயப் மக்சூத் 21 (12) ரன்னில் வினைய் குமார் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்த சில மறுபுறம் தடுமாறிக் கொண்டிருந்த கம்ரான் அக்மல் 24 (19) ரன்களில் பவன் நெகி சுழலில் போல்டானார்.

- Advertisement -

2007 ஃபைனல் ரிப்பீட்:
போதாகுறைக்கு அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் யூனிஸ் கான் தடுமாற்றமாக விளையாடி 7 (10) ரன்கள் எடுத்த போது இர்பான் பதான் வேகத்தில் கிளீன் போல்டானர். அதனால் 79/4 என தடுமாறிய அந்த அணியை சோயப் மாலிக் மற்றும் மிஸ்பா ஆகியோர் சேர்ந்து தூக்க முயற்சித்தனர். ஆனால் அதில் மிஸ்பா முக்கிய நேரத்தில் 18 (15) ரன்னில் காயமடைந்து வெளியேறினார்.

அடுத்து வந்த அமீர் யாமின் 7 ரன்னில் அவுட்டான நிலையில் மறுபுறம் அதிரடியாக விளையாட முடியாமல் தவித்த சோயப் மாலிக் 41 (36) ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் சாகித் அப்ரிடி 4* (4), சோஹைல் தன்வீர் 19* (9) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் 156/6 ரன்கள் எடுத்தது. இந்தியா சாம்பியன் சார்பில் அதிகபட்சமாக அனுரீத் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து 157 ரன்களை துரத்திய இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு ராபின் உத்தப்பா 10, சுரேஷ் ரெய்னா 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 38/2 தடுமாறிய போது மற்றொரு துவக்க வீரர் அம்பத்தி ராயுடு அதிரடியாக விளையாடினார். குறிப்பாக அடுத்து வந்த குக்கீரத் சிங்குடன் சேர்ந்து அசத்தலாக விளையாடிய அவர் 3வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அப்படி வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த ராயுடு 5 பவுண்டரி 2 சிக்சருடன் 50 (30) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்த சில ஓவரில் குர்கீரத்தும் 34 (33) ரன்னில் அவுட்டாகி சென்றார். அப்போது வந்த கேப்டன் யுவராஜ் சிங் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் களமிறங்கி அதிரடி காட்டிய யூசுப் பதான் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 30 (16) ரன்கள் விளாசி திருப்புமுனையை உண்டாக்கி விட்டனர். அதை வீணடிக்காமல் அசத்திய யுவராஜ் சிங் 15* ரன்களும் இர்பான் பதான் 5* ரன்களும் எடுத்ததால் 19.1 ஓவரில் 159/5 ரன்கள் எடுத்த இந்தியா சாம்பியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதையும் படிங்க: கெட்டப்பை மாற்றினாலும் கேரக்டர் மாறாத தேஷ்பாண்டே.. 74வது வீரருடன் ஆஸியை மிஞ்சி இந்தியா தனித்துவ சாதனை

அதனால் 2007 டி20 உலகக் கோப்பை பைனலில் தோனி தலைமையில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. இம்முறை யுவராஜ் தலைமையில் 5 விக்கெட் வித்யாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா சாம்பியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மறுபுறம் அமீர் யாமின் 2 விக்கெட்டுகள் எடுத்தும் பாகிஸ்தான் 2007 போலவே 17 வருடங்கள் கழித்தும் பரிதாபமாக இந்தியாவிடம் தோற்றது.

Advertisement