தப்புக்கு மன்னிப்பு கேட்டேன்.. லாராவும் பாபர் அசாமும் ஒன்னா? ஹர்பஜனும் ஒத்துகிட்டாரு.. கம்ரான் அக்மல் பேட்டி

Kamran Akmal
- Advertisement -

ஓய்வு பெற்ற வீரர்கள் இங்கிலாந்தின் லண்டன் நகரில் உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜன்ட்ஸ் எனும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன. அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியது.

அந்தப் போட்டியின் முடிவில் இந்தியா ஹர்பஜன் சிங் மற்றும் பாகிஸ்தானின் கம்ரான் அகமல் ஆகியோர் காரசாரமாக விவாதித்துக் கொண்டது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் ஹர்பஜன் சிங்கிடம் தாம் பேசியது பற்றி கம்ரான் அக்மல் விவரித்துள்ளார். அதாவது 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்கின் சீக்கிய மதத்தை கிண்டலடிக்கும் வகையில் கம்ரான் அக்மல் பேசியிருந்தார்.

- Advertisement -

மன்னிப்பின் பின்னணி:
அதற்கு ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் காரணமாக ஏற்கனவே ட்விட்டரில் கம்ரான் அகமல் மன்னிப்பு கேட்டிருந்தார். அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் நேரடியாக ஹர்பஜன் சிங்கை சந்தித்த போது மன்னிப்பு கேட்டதாக கம்ரான் அக்மல் கூறினார். அதே போல பாபர் அசாமை சிரித்து கிண்டலடித்தது தவறு என்று ஹர்பஜன் தம்மிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.

அதாவது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்கட்சியில் கடந்த வாரம் சச்சின் – விராட் கோலி, பாண்டிங் – ரோஹித் என்ற முன்னாள் இந்நாள் வீரர்களின் ஒப்பீடு நடைபெற்றது. அப்போது பிரைன் லாரா – பாபர் அசாம் ஆகியோரில் சிறந்தவர் யார்? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அதற்கு லாராவும் – பாபர் அசாமும் ஒன்னா? என்று பதிலளித்த ஹர்பஜன் சிங் அடக்க முடியாமல் வெறித்தனமாக சிரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

- Advertisement -

அதற்கு ஹர்பஜன் வருந்தியதாக தெரிவிக்கும் கம்ரான் அக்மல் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நான் தவறு செய்தேன். அதைப் பற்றி தான் நாங்கள் விவாதத்தும். யாருடைய மதத்தைப் பற்றியும் நான் எப்போதும் நான் எதிர்மறையாக சிந்தித்ததில்லை. அதை தெளிவாக சொல்லி விட்டேன். அதை நான் செய்திருக்க வேண்டும். ஏனெனில் நான் இந்தியாவின் மகத்தான சீனியர் ஆஃப் ஸ்பின்னரை விட வயதில் குறைந்தவன்”

இதையும் படிங்க: நான் உள்ளூர் போட்டியில் ஆடாததுக்கு காரணமே இதுதான்.. இப்போ ரொம்ப வருத்தத்தில் இருக்கேன் – இஷான் கிஷன் வெளிப்படை

“அதன் பின் பாபர் அசாமை கிண்டலடித்தது பற்றி பேசினோம். பாபர் அசாம் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன், அதிக சதங்கள் அடித்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் பாபர் அசாம் – பிரைன் லாரா ஆகியோரை பொருத்துவது சரியல்ல. இருப்பினும் முன்னாள் வீரர்களான நாம் யாரையும் கிணடலடிக்கக்கூடாது என்று சொன்னேன். எனவே ஹர்பஜன் சிங்கும் அவ்வாறு தாம் செய்திருக்கக் கூடாது என்பதை ஒப்புக்கொண்டார்” என்று கூறினார்.

Advertisement