இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்டார். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத பிசிசிஐ இந்திய அணியில் அவர் மீண்டும் இடப்பிடிக்க வேண்டுமெனில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தனது திறனை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தை விதித்தது.
ஆனால் ரஞ்சி கோப்பையில் விளையாடாத இஷான் கிஷன் ஐபிஎல் போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் டி20 உலக கோப்பை அணியில் இடம்பெறவில்லை. அதோடு நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை.
ஏற்கனவே மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியில் இருந்து நீக்கப்பட்ட அவர் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பது கடினம் என்று பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் விளையாடாமல் இருப்பது குறித்து பேசியுள்ள இஷான் கிஷன் தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடினால் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியும் என்று கூறினார்கள். ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நான் விளையாடும் மனநிலையில் அப்போது இல்லை.
அதனால் என்னால் தற்போது இந்திய அணியில் விளையாட முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் மற்றும் ரஞ்சி தொடரில் நான் விளையாடாமல் ஐபிஎல் தொடரில் விளையாடி இருந்தேன்.
இதையும் படிங்க : அவரோட பேட்டில் அடிச்சேன்.. என்னோட அதிரடிக்கு பலரும் கிண்டல் பண்ண அது தான் காரணம்.. அபிஷேக் பேட்டி
ஆனாலும் என்னால் அந்த தொடரில் நினைத்தது போன்று விளையாட முடியவில்லை. அதன்பிறகு எதுவுமே என் பக்கம் செல்லவில்லை. தற்போது இந்திய அணியில் விளையாடாமல் இருப்பது மிகவும் மன வருத்தம் அளிப்பதாக பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.



