இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட இருக்கும் வீரர்.. அவ்ளோதான் அவரது கரியர் ஓவர் – விவரம் இதோ

Chahal
- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதனை தொடர்ந்து மும்பையில் நடைபெற்ற பாராட்டு விழாவிலும் கலந்து கொண்ட இந்திய அணி தற்போது வெற்றியை கொண்டாடி வருகிறது.

இவ்வேளையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு சென்றுள்ளது. அந்த வகையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

- Advertisement -

அந்த அணியில் டி20 உலக கோப்பையில் விளையாடிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு முற்றிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று ஒரு போட்டியில் கூட விளையாடாமல் இருந்த யுஸ்வேந்திர சாஹல் இந்த ஜிம்பாப்வே தொடரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரை இந்திய அணி நிர்வாகம் அணியிலிருந்து நீக்கிவிட்டது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் வாய்ப்பின்றி தவித்து வந்த சாஹல் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அசத்தலாக செயல்பட்டு உலக கோப்பை அணியில் இடம் பிடித்தார். ஆனாலும் அவருக்கு அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஜிம்பாப்வே தொடரிலாவது அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலும் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் இனி வரும் தொடர்களில் நிச்சயம் அவர் இடம்பெற வாய்ப்பு இல்லை.

இதையும் படிங்க : கோலி, பும்ரா, பாண்டியாவை விட அவர் தான் 2024 டி20 உ.கோ வெற்றிக்கு உச்சமா இருந்தாரு.. கவாஸ்கர் பாராட்டு

எனவே இனியும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. அதோடு தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் அவருக்கு இனியும் வாய்ப்பு கிடைக்காது என்பதால் அவரது கரியர் தற்போதே முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம்.

Advertisement