விராட் கோலி அப்படி செஞ்சுருந்தா இந்தியா தோத்துருக்கும் பரவால்லயா? மஞ்ரேக்கருக்கு மிஸ்பா பதிலடி

Misbah Ul Haq
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. குறிப்பாக மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்த வெற்றியுடன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக இத்தொடரின் முதல் 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்த விராட் கோலி முக்கியமான இறுதிப் போட்டியில் 76 ரன்கள் அடித்து இந்தியாவை காப்பாற்றினார். குறிப்பாக 34/3 என தடுமாறிய போது அக்சர் படேல், துபே ஆகியோருடன் சேர்ந்து நங்கூரமாக விளையாடிய அவர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இருப்பினும் ஆரம்பத்திலேயே விக்கெட் விழுந்ததால் அப்போட்டியில் விராட் கோலி 128 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார்.

- Advertisement -

மிஸ்பா பதிலடி:
அதனால் விராட் கோலி இந்தியாவை இறுக்கியதாக தெரிவித்த சஞ்சய் மஞ்ரேக்கர் பவுலர்கள் தான் வெற்றியை பெற்றுக் கொடுத்ததாக கூறியிருந்தார். ஒருவேளை இந்தியா தோல்வியை சந்தித்திருந்தால் அதற்கு காரணம் விராட் கோலியாக இருந்திருப்பார் என்று தெரிவித்த அவர் ஆட்டநாயகன் விருதை ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற ஏதேனும் பவுலருக்கு கொடுத்திருக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரைப் போன்ற விமர்சகர்களுக்கு முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி டென் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி 37 பந்துகளை எடுத்துக் கொண்டார் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்வேன். அது நல்லது. ஆனால் ஒருவேளை விராட் கோலி ரிஸ்க் எடுத்து விளையாடி 37 பந்துகளில் அவுட்டாகியிருந்தால் இந்தியா 140 – 150 ரன்களை மட்டுமே கட்டுப்படுத்தியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும்”

- Advertisement -

“எனவே சூழ்நிலை இருபக்கமும் சென்றிருக்கலாம். ஏனெனில் அந்த நேரத்தில் இந்தியா இரு புறமும் செல்வதற்கான இடத்தில் நின்று கொண்டிருந்தனர். அதாவது அவர்கள் 170 ரன்கள் அடித்திருப்பார்கள். அல்லது அதிரடியாக விளையாடியிருந்தால் 190 ரன்கள் தொட்டிருப்பார்கள். அல்லது அவர் அவுட்டாகி இருந்தால் 140 ரன்கள் மட்டுமே எடுத்திருப்பார்கள்”

இதையும் படிங்க: சகாப்தம் முடிஞ்சுருக்கு.. அவர் மீண்டும் நிரூப்பிச்சுட்டாரு.. ஓய்வு பெற்ற விராட், ஜடேஜா, ரோஹித்தை வாழ்த்திய ஏபிடி

“எனவே அந்த ரிஸ்க்கை புரிந்து கொண்டு விளையாடிய இந்தியா ஒரு வழியாக வெற்றி பெற்றனர்” என்று கூறினார். அதாவது ஒருவேளை 37 பந்துகள் கடந்ததும் அதிரடியாக விளையாட முயற்சித்து விராட் கோலி அவுட்டாகியிருந்தால் இந்தியா தோற்றிருக்கும் என்று மிஸ்பா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த சூழ்நிலையை சரியாக புரிந்து விராட் கோலி விளையாடியதாக அவர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement