3 பேர் ரெடியா இருந்தப்போ.. எந்த ஐன்ஸ்டீன் இந்த முடிவை எடுத்தது? இங்கிலாந்தை விளாசி இந்தியாவை பாராட்டிய அக்தர்

Shoaib Akhtar 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது செமி ஃபைனலில் இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. ஜூன் 27ஆம் தேதி கயானா நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 57, சூரியகுமார் யாதவ் 47 ரன்கள் எடுத்தனர்.

ஆனால் சேசிங் செய்த இங்கிலாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சுமாராக விளையாடி 103 ரன்கள் சுருண்டு தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹரி குரூப் 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல், யாதவ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனல் தோல்விக்கு இங்கிலாந்தை பழி தீர்த்த இந்தியா ஜூன் 29இல் நடைபெறும் ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

- Advertisement -

தவறான முடிவு:
இந்நிலையில் மழை பெய்து சுழலுக்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் குல்தீப், ஜடேஜா, அக்சர் ஆகிய 3 ஸ்பின்னர்கள் இங்கிலாந்தை தெறிக்க விட தயாராக இருந்ததாக சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கே டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் முதலில் பேட்டிங் செய்யாத முடிவை இங்கிலாந்து அணியின் எந்த ஐன்ஸ்டீன் அறிவாளி எடுத்தது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மறுபுறம் இந்தியா அற்புதமாக விளையாடி வென்றதாக பாராட்டும் அவர் இது பற்றி ட்விட்டரில் பேசியுள்ளது பின்வருமாறு. “டாஸ் வென்று சேசிங் செய்ய வேண்டும் என்று இங்கிலாந்துக்கு எந்த ஐன்ஸ்டீன் சொன்னது. அவர்களிடம் எந்த சயின்டிஸ்ட் இருக்கிறார். அக்சர், மேட்ச் வின்னர் குல்தீப், ஜடேஜா ஆகிய 3 ஸ்பின்னர்களுடன் பும்ராவும் எதிரணியில் இருக்கிறார். எனவே டாஸ் வென்று இந்தியாவுக்கு எதிராக சேசிங் செய்ய வேண்டும் என்று யார் உங்களுக்கு சொன்னது”

- Advertisement -

“அது சரியான முடிவு என்று நான் நினைக்கவில்லை. மறுபுறம் இந்தியா வென்றதை பார்த்தது மகிழ்ச்சி. பேட்டிங்கில் அசத்திய அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள். ரோஹித் சர்மா போல் வேறு பேட்ஸ்மேன்கள் இல்லை என்று நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன். அதே போல ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் அசத்தினர். இந்த மூவரில் ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டர்”

இதையும் படிங்க: இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள 2 அணிகளுக்கும் இடையேயுள்ள ஒரு ஒற்றுமை – ஆனாலும் இந்தியா மாஸ் தான்

“ஏதோ ஒரு வகையில் அவர் உங்களுக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார்” என்று கூறினார். முன்னதாக டாஸ் தோல்வியை சந்தித்தாலும் நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பியதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். கடைசியில் அவர் சொன்னது போலவே பெரிய ஸ்கோர் அடித்த இந்தியா நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்து ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

Advertisement