அவங்க மிஸ் பண்ணா என்னோட ஆதரவு இந்தியாவுக்கு தான்.. பண்ட்டுக்கு விருது வழங்கி வாழ்த்திய ரிச்சர்ட்ஸ்

Viv Richards
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய 2வது சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஆன்ட்டிகுவா நகரில் ஜூன் 22ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 50, விராட் கோலி 37 ரன்கள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த வங்கதேசத்தை 20 ஓவரில் 146/8 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா 2வது வெற்றியை பெற்றது. வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக கேப்டன் சாந்தோ 40 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். இதனால் தங்களுடைய கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் இந்தியா செமி ஃபைனல் செல்வது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

வாழ்த்திய ரிச்சர்ட்ஸ்:
ஒருவேளை அதில் சிறிய தோல்வியை சந்தித்தால் கூட ரன்ரேட் அடிப்படையில் இந்தியா செமி ஃபைனல் செல்வதற்கான பிரகாச வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் மிகச்சிறப்பாக ஃபீல்டிங் செய்த ரிசப் பண்ட்க்கு இந்திய அணியின் சிறந்த ஃபீல்டருக்கான விருது வழங்கப்பட்டது. அதை ஆன்ட்டிகுவா நகரின் ஹீரோவான முன்னாள் ஜாம்பவான் வீரர் சர் விவ் ரிச்சர்ட்ஸ் வழங்கி வாழ்த்திப் பேசினார்.

அத்துடன் ஒருவேளை இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் ஃபைனல் வரத் தவறினால் இந்தியா கோப்பையை வெல்வதற்கு தாம் ஆதரவு கொடுப்பேன் என்றும் ரிச்சர்ட்ஸ் கூறினார். இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் கடினமான நேரத்தை கடந்து நீங்கள் இங்கே வந்துள்ளதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. நாங்கள் ஒரு மகத்தான திறமையையும் வருங்காலத்தில் நீங்கள் வெளிப்படுத்தக்கூடிய செயல்பாடுகளையும் தவற விட்டுருப்போம்”

- Advertisement -

“நீங்கள் உங்களுடைய கிரிக்கெட்டை விளையாடும் விதத்தை பார்ப்பது நன்றாக இருக்கிறது. வெல்டன். நீங்கள் (இந்திய அணியினர்) அனைவரும் இன்று அனைத்து வழிகளிலும் அசத்தினீர்கள். இந்த அணி மிகவும் பவர்ஃபுல்லாக இருக்கிறது என்று நான் சொல்வேன். இங்கே உங்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கிறது”

இதையும் படிங்க: இந்தியாவிடம் தோற்றாலும் அதை மாற்றாததே வெற்றிக்கு காரணம்.. ஆஸியை வீழ்த்தியது பற்றி ரசித் கான் பேட்டி

“ஒருவேளை மெருன் (வெஸ்ட் இண்டீஸ்) பையன்கள் இதை செய்யாவிட்டால் நான் உங்களுக்கு ஆதரவு கொடுப்பேன். அந்த காரணம் போதாதா? நான் கரீபியன் மனிதர். நீங்கள் இங்கே விளையாடுவதை பார்ப்பது நன்றாக இருக்கிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா ஜூன் 24 ஆம் தேதி தங்களுடைய கடைசி சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement