இந்திய அணியில் அவருக்கு இடம் கூட தரமாட்டாங்க.. பாகிஸ்தானுக்கு அந்த ட்ரிக் தெரியல.. மைக்கேல் வாகன்

Micheal Vaughan 3
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. 2009 டி20 சாம்பியனான பாகிஸ்தான் இந்த வருடம் கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் முதல் போட்டியிலேயே சூப்பர் ஓவரில் தோற்றது. அதை தொடர்ந்து பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக வெறும் 120 ரன்களை அடிக்க முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை பதிவு செய்தது.

அதன் காரணமாக கனடாவுக்கு எதிரான போட்டியில் வென்றும் பாகிஸ்தான் பரிதாபமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த அணியின் இந்த தோல்விக்கு முகமத் ரிஸ்வான், ஷாஹீன் அஃப்ரிடி உள்ளிட்ட அனைவருமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றனர். குறிப்பாக விராட் கோலிக்கு நிகரானவர் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடும் கேப்டன் பாபர் அசாம் இந்த தொடரில் மொத்தமாக சொதப்பினார்.

- Advertisement -

இடமே கிடைக்காது:
இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற டாப் அணியில் பாபர் அசாமுக்கு இடமே கிடைக்காது என மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். அத்துடன் இந்தியாவை எப்படி ஐசிசி தொடரில் வீழ்த்த வேண்டும் என்பது பாகிஸ்தானுக்கு தெரிவதில்லை என்று விமர்சிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “அவர்கள் வானிலையை குறை சொல்ல முடியாது”

“அவர்கள் அமெரிக்கா மற்றும் இந்தியாவை தோற்கடித்திருக்க வேண்டும். அதை செய்திருந்தால் இந்நேரம் சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் இருந்திருக்கும். கடந்த டி20 உலகக் கோப்பையில் ஃபைனலுக்கு வந்தாலும் தற்சமயத்தில் பாகிஸ்தானை சிறந்த வெள்ளைப்பந்து அணியாக நான் பார்க்கவில்லை. கடந்த காலங்களைப் போல தற்போது டி20 கிரிக்கெட்டில் அசத்துவதற்கு தேவையான திறமை பாகிஸ்தான் அணியிடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை”

- Advertisement -

“உண்மையாக அவர்கள் அணியில் நிறைய மகத்தான டி20 வீரர்கள் இருப்பதாக தோன்றவில்லை. பாபர் அசாம் சிறப்பானவர். ஆனால் அவர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா அல்லது வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் இடம் பிடிப்பாரா? என்று கேட்டால் இல்லை. மேலும் மனதளவில் இந்தியாவை எப்படி தோற்கடிக்க வேண்டும் என்ற குறிப்பே பாகிஸ்தானிடம் இல்லை”

இதையும் படிங்க: இங்கயே இப்படின்னா அங்க நினச்சு பாருங்க.. பும்ரா மாதிரி அர்ஷ்தீப்புக்கு சான்ஸ் கொடுங்க.. கவாஸ்கர் ஆதரவு

“இதுவே உண்மை. அதை அவர்களுடைய சேசிங்கில் பார்த்தேன். அந்தப் போட்டியில் அவர்கள் மொத்தமாக சொதப்பினர். காரணம் எதுவாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிக்கோட்டை எப்படி கடக்க வேண்டும் என்பது இந்தியாவுக்கு நன்றாக தெரிகிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தங்களுடைய சம்பிரதாய கடைசி போட்டியில் அயர்லாந்து அணியை ஃப்ளோரிடா நகரில் ஜூன் 16ஆம் தேதி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement