முடிஞ்சு போனதா எழுதாதீங்க.. இப்போவும் அவர் கம்பேக் கொடுத்து சாதனை படைப்பாரு.. வாசிம் ஜாபர் உறுதி

Wasim Jaffer 3
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. அதனால் குரூப் ஏ பிரிவின் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய கடைசி லீக் போட்டியில் கனடாவை எதிர்கொள்கிறது.

முன்னதாக இந்தத் தொடரில் பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரங்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தடுமாற்றமாக செயல்பட்டு வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. குறிப்பாக துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி இதுவரை 1, 4, 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக துவக்க வீரராக களமிறங்கி 741 ரன்கள் அடித்த அவர் ஆரஞ்சு தொப்பியை வென்றார்.

- Advertisement -

எழுத வேண்டாம்:
அதனால் இந்த உலகக் கோப்பையிலும் விராட் கோலி அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைப்பார் என்று ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் ஸ்மித் போன்ற பலரும் கணித்திருந்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக தடுமாறும் விராட் கோலி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டாகி சுமாராக செயல்பட்டு வருகிறார். எனவே அவரை மீண்டும் 3வது இடத்தில் களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் விராட் கோலியை முடிந்து விட்டதாக யாரும் எழுத வேண்டாம் என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஏற்கனவே கணித்தது போல் இப்போதும் விராட் கோலி இத்தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக வருவார் என்று அவர் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நியூயார்க் நகரில் கடினமான பிட்ச்சில் விளையாடினர். எனவே அவர்கள் டாப் ரன்கள் அடித்த வீரர்களில் இல்லை. ஆனால் விராட் கோலியை முடிந்தவராக எழுத வேண்டாம். இந்த தொடர் இறுதிக்கட்டத்தை தொடும் போது அவர் அவர் தனது உண்மையான வண்ணங்களையும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துவார்”

இதையும் படிங்க: அடிச்சதே 110 ரன் தான்.. இதுல 5 ரன் பெனால்டி வேறயா? இந்திய அணிக்கு போனஸ் கிடைக்க – என்ன காரணம்?

“நான் விராட் கோலியை அதிக ரன்கள் அடிப்பவராக கணித்திருந்தேன். இப்போதும் அதையே சொல்கிறேன். விராட் கோலி 3வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று நான் கருதவில்லை. அவர் தொடர்ந்து ஓப்பனிங்கில் விளையாடலாம். ஏனெனில் ரிஷப் பண்டை 3வது களமிறக்கிய முடிவு வேலை செய்துள்ளது. ஜெய்ஸ்வால் இருப்பதால் இடது – வலது கை ஓப்பனிங் ஜோடியை தேர்ந்தெடுக்க முடியும் என்றாலும் அது சாத்தியமாக தெரியவில்லை” என்று கூறினார்.

Advertisement