இந்தியாவில் பெஞ்சில் தான் இருந்தேன்.. ஆனா நியூஸிலாந்தை வீழ்த்த ஐபிஎல் தான் காரணம்.. ரூத்தர்போர்ட் பேட்டி

Rutherford
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஜூன் 13ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற 26வது லீக் போட்டியில் நியூசிலாந்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 149/9 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக செர்பான் ரூதர்போர்ட் 68* (39) ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். ஆனால் அதைத்தொடர்ந்து 150 ரன்களை துரத்திய நியூசிலாந்து ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 136/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு கேன் வில்லியம்சன், டேவோன் கான்வே உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ஐபிஎல் உதவி:
அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 40 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வெற்றியால் வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் 8க்கு தகுதி பெற்று அசத்தியது. மறுபுறம் 2 போட்டிகளில் 2 தோல்வியை சந்தித்த நியூசிலாந்து லீக் சுற்றுடன் வெளியேறுவது 90% உறுதியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரூத்தர்போர்ட் ஆட்டநாயகன் என்பதை வென்றார்.

குறிப்பாக 30/5 என வெஸ்ட் இண்டீஸ் தடுமாறிய போது மிடில் ஆர்டரில் களமிறங்கி 6 பவுண்டரி 6 பறக்கவிட்ட அவர் 68* (39) ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்ற 2024 ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்திருந்தாலும் அங்கு கிடைத்த வசதிகள் மற்றும் பயிற்சியாளர்களை வைத்து உலகக் கோப்பைக்கு தயாரானதாக ரூதர்போர்ட் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வாய்ப்புக்காக கடவுளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் ஐபிஎல் தொடரில் நான் 2 மாதங்கள் இருந்தேன். அங்கே வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்த தொடருக்காக நான் தயாரானேன். போட்டியை கடைசி வரை எடுத்துச் செல்வதே திட்டமாகும். நானும் டேரன் சம்மியும் பேசினோம். கடைசி வரை எடுத்துச் சென்றால் கடைசியில் அதிரடியாக அடிக்க முடியும் என்று பேசிக்கொண்டோம்”

இதையும் படிங்க: ரூல்ஸ் தெரியாமல் சொதப்பிய அமெரிக்கா.. 5 ரன்ஸ் பெனால்டியால் இந்தியாவின் வெற்றியை எளிதாக்கி பரிதாப சாதனை

“எதிரணியில் கடைசி 2 ஓவர்களை வீசுவதற்கு தரமான பவுலர்கள் இல்லை என்பதை பார்த்தேன். அதனால் கடைசி வரை விளையாடினால் அங்கே நம்மால் பெரிய ரன்கள் குவிக்க முடியும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அந்த ஓவர்களை அதிகமாக பயன்படுத்த விரும்பினேன். அந்த திட்டத்தை பின்பற்றிய நான் சரியாக செய்தேன். எங்க

Advertisement