இந்திய அணியில் இருக்கும் சூரியகுமார் யாதவ் எனக்கு நெருங்கிய நண்பர் – அமெரிக்க வீரர் பகிர்ந்த சுவாரசிய தகவல்

Saurabh
- Advertisement -

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்திய இந்திய அணி சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேறும் உத்வேகத்துடன் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் முக்கிய லீக் ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. சொந்த மண்ணில் இந்த தொடரை விளையாடி வரும் அமெரிக்கா அணியானது தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தான் போன்ற பலமான அணியை வீழ்த்தி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணிக்கு எதிராகவும் அவர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் அமெரிக்கா அணியில் நிறைய இந்தியாவை சேர்ந்த வீரர்கள் இடம் பெற்று இருப்பதால் இந்திய அணிக்கு எதிரான போட்டி மிகச் சிறப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு எதிராக விளையாட இருப்பது குறித்து பேசியுள்ள இந்திய வம்சாவளி வீரரான சவுரப் நேத்ரவால்கர் பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் 15 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணியில் விளையாடிய போது சூரியகுமார் யாதவுடன் இணைந்து விளையாடினேன். என்னுடைய சிறு வயதிலிருந்து நாங்கள் இருவரும் ஒன்றாக வளர்ந்தோம். நானும் சூரியகுமார் யாதவும் மிக நெருங்கிய நண்பர்கள்.

- Advertisement -

என்னுடைய கிரிக்கெட்டின் ஆரம்ப காலத்தில் இருந்தே நான் அவரை பார்த்து வருகிறேன். தற்போது நான் அமெரிக்கா வந்து விளையாடி வரும் வேளையில் சூரியகுமார் யாதவ் இந்திய அணியில் பெரிய வீரராக வளர்ந்திருப்பதை பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் எவ்வளவு பலம் வாய்ந்த வீரர் என்பதை அவரது ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : பாகிஸ்தானுக்கு எதிராக பும்ராவை வெச்சு.. ரோஹித் செஞ்சு இந்த தப்பு தோல்வியை கொடுத்துருக்கலாம்.. கபில் தேவ்

அதேபோன்று நான் ரோகித் சர்மாவிற்கு எதிராகவும் வலைப்பயிற்சியில் நிறைய முறை விளையாடி இருக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சி செய்யும் போதெல்லாம் அவருக்கு எதிராக பௌலிங் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement