அமெரிக்கா அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND-vs-USA
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே ஐசிசி கோப்பையை தவறவிட்டு வரும் இந்திய அணி இம்முறை இந்து டி20 உலக கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்கிற முனைப்புடன் விளையாடி வருகிறது.

அந்த வகையில் இந்த தொடரில் இதுவரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள இந்திய அணியானது முதல் போட்டியில் அயர்லாந்து அணியையும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தியது. அதனை தொடர்ந்து இன்று நடைபெற இருக்கும் முக்கிய ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்க அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய அமெரிக்க அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த உத்தேச பட்டியலை தான் இந்த தொகுப்பில் காணலாம். அந்த வகையில் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய போட்டியில் நிச்சயம் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ஒரு நிலையான அணியை இறுதிவரை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கும் கேப்டனான ரோஹித் சர்மா இந்த போட்டியில் கடந்த இரண்டு போட்டியில் விளையாடிய அதே வீரர்களை கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கலாம். அதன்படி இன்றைய அமெரிக்க அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் துவக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரே தொடர்வார்கள்.

- Advertisement -

மூன்றாவது இடத்தில் வழக்கம் போல் ரிஷப் பண்ட்டும், நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவும் விளையாடுவார்கள். அதே போன்று வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் 5 மற்றும் 6 இடங்களில் விளையாடுவார்கள்.

இதையும் படிங்க : 5.4 ஓவரில் 74 ரன்ஸ்.. ஆஸி சாதனை வெற்றி.. டிராவிட்டுக்கு டஃப் கொடுத்த நமீபியா வீரர்.. மோசமான சாதனை

சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் 7 மற்றும் 8 இடத்தில் விளையாடுவார்கள். மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் முறையை 9, 10, 11 ஆகிய இடங்களில் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement