சூப்பர் ஓவரில் அவரை அனுப்பாமா தப்பு செஞ்ச பாகிஸ்தான்.. இப்போ இந்தியாவிடம் மாட்டிக்கிட்டாங்க.. யுவராஜ்

- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற 11வது லீக் போட்டியில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் அமெரிக்கா வீழ்த்தியது. டாலஸ் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 44, சடாப் கான் 40 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 159/7 ரன்கள் எடுத்தது.

அதைத் துரத்திய அமெரிக்காவுக்கு கேப்டன் மோனக் படேல் 50, ஆண்ட்ரீஸ் கவுஸ் 35, ஆரோன் ஜோன்ஸ் 36*, நிதிஷ் குமார் 14* ரன்கள் எடுத்தனர். அதனால் 20 ஓவரில் அமெரிக்காவும் 159/3 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் அமெரிக்கா 18/1 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

யுவராஜ் விமர்சனம்:
குறிப்பாக ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் முகமது அமீர் 8 ஒய்ட் ரன்கள் வாரி வழங்கினார். அதைத்தொடர்ந்து 19 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு எதிராக 13 ரன்கள் மட்டுமே கொடுத்த நேத்ராவல்கர் 1 விக்கெட்டை எடுத்து அமெரிக்காவை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்து அமெரிக்கா வரலாறு படைத்தது.

மறுபுறம் அமெரிக்கா போன்ற கத்துக்குட்டி உறுப்பு நாட்டு அணியிடம் டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக தோல்வியை சந்தித்து பாகிஸ்தான் அவமானத்தை சந்தித்தது. முன்னதாக இந்தப் போட்டியில் சூப்பர் ஓவரில் இப்திகார் அகமது மற்றும் பஃகார் ஜமான் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் அதில் இப்திகார் அகமது ஸ்ட்ரைக்கை எடுத்து முதல் 3 பந்துகளில் 1 பவுண்டரி மட்டுமே அடித்து அவுட்டானார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து வந்த சடாப் கான் கடைசி 3 பந்துகளை எதிர்கொண்டதால் பகார் ஜமானுக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் சூப்பர் ஓவரில் ஃபக்கார் ஜாமான் ஆரம்பத்திலேயே ஸ்ட்ரைக்கை எடுத்திருக்க வேண்டும் என்று ஜாம்பவான் யுவராஜ் சிங் பாகிஸ்தானின் தவறை சுட்டிக்காட்டியுள்ளார். இது பற்றி டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இடது கை வேகப்பந்து வீச்சாளர் பவுலிங் செய்த போது பகார் ஜமான் ஏன் ஸ்ட்ரைக்கை எடுக்கவில்லை என்பது எனக்கு புரியவில்லை”

இதையும் படிங்க: பாகிஸ்தானை வீழ்த்த வெறும் 30 நிமிடம் போதும்.. வெற்றிக்கு இதான் காரணம்.. சொன்னதை செய்த அமெரிக்க கேப்டன்

“இடது கை பேட்ஸ்மேனாக இருந்தால் அந்த பவுலர் வீசும் கோணத்தில் எளிதாக அடித்திருக்கலாம். அழுத்தமான சூழ்நிலையில் எதையும் உருவாக்க முயற்சிக்காக அமெரிக்க கேப்டன் மோனக் பட்டேலின் முடிவை அந்த பவுலர் சாதுரியமாக மாற்றினார். தற்போது பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக பேட்டிங், ஃபீல்டிங் செய்து கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இந்தியா வலுவான துவக்கத்தை பெற்றுள்ளதால் எங்களை பாகிஸ்தான் வீழ்த்துவது கடினம்” என்று கூறியுள்ளார்.

Advertisement