52 ரன்ஸ்.. எம்எஸ் தோனியின் வாழ்நாள் சாதனையை உடைத்த ஹிட்மேன்.. கிங் கோலியையும் முந்தி 3 சாதனை

- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதனால் குரூப் ஏ பிரிவில் 2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ள இந்தியா இந்த உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ஜூன் 5ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து 97 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக டிலானி 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக 52* (37), ரிஷப் பண்ட் 36* (26) ரன்கள் எடுத்து 12.2 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய அயர்லாந்து முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஹிட்மேன் சாதனைகள்:
முன்னதாக இந்தப் போட்டியில் பேட்டிங்க்கு சவாலான பிட்ச்சில் 4 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்ட கேப்டன் ரோகித் சர்மா இந்தியாவின் வெற்றியை எளிதாக்கினார். இதையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகியோருக்கு பின் 4000 ரன்கள் அடித்த 3வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

சொல்லப்போனால் இந்த 4000 ரன்களை அவர் 2860 பந்துகளிலேயே எடுத்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக 4000 ரன்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி 2900, பாபர் அசாம் 3081 பந்துகளில் 4000 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

அத்துடன் இந்த வெற்றியையும் சேர்த்து கேப்டனாக அவர் இந்தியாவுக்கு 55 டி20 போட்டிகளில் 43 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற தோனியின் வாழ்நாள் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் எம்எஸ் தோனி 72 போட்டிகளில் 42 வெற்றிகள் பெற்றதை முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: இவ்ளோ கிடைக்கும் போது புகார் செய்யமாட்டேன்.. எல்லாத்துக்கும் ரெடியா இருக்கனும்.. ஆட்டநாயகன் பும்ரா பேட்டி

இது போக டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த இந்திய கேப்டன் (14 முறை) என்ற சாதனையும் ரோகித் சர்மா படித்துள்ளார். அத்துடன் உலகக் கோப்பை வரலாற்றில் சேசிங் செய்த போட்டியில் 50+ ரன்கள் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையும் ரோகித் அடைந்துள்ளார். மேலும் ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். அது போக டி20 உலக கோப்பையில் 1000 ரன்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.

Advertisement