ஆர்சிபி நண்பன் சிராஜுக்கு இடமில்லை.. 4 ஆல் ரவுண்டர்கள்.. டிகே கணித்த உத்தேச இந்திய ப்ளேயிங் லெவன்

Dinesh Karthik 3
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அயர்லாந்தை சந்திக்கிறது. ஜூன் 5ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கும் அந்தப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான 11 பேர் அணியில் விளையாடப் போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் விளையாடப் போகும் 11 பேர் கொண்ட இந்திய அணியை நிறைய முன்னாள் வீரர்கள் கணித்து வருகின்றனர். அந்த வகையில் 2024 ஐபிஎல் தொடரில் ஓய்வு பெற்ற மூத்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தம்முடைய 11 பேர் கொண்ட இந்திய அணி பற்றிய கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஆரஞ்சு தொப்பியை வென்றதால் விராட் கோலி ஓப்பனிங்கில் களமிறங்குவார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

- Advertisement -

டிகே லெவன்:
மேலும் ரிஷப் பண்ட் 3வது இடத்தில் தேர்வு செய்துள்ள அவர் ஆர்சிபி அணியில் சுமாராக செயல்பட்ட முகமது சிராஜ் விளையாட வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். அத்துடன் பாண்டியா, துபே, அக்சர், ஜடேஜா ஆகிய 4 ஆல் ரவுண்டர்கள் விளையாடுவார் என்று கணிக்கும் அவர் இது பற்றி க்ரிக்பஸ் இணையத்தில் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“ரிஷப் பண்ட் பயிற்சிப் போட்டியில் அழகாக விளையாடினார். சஞ்சு சாம்சனை ஆரம்பத்திலேயே இழந்தாலும் ரோஹித் தர்மா தடுமாறினார். ஆனால் ரிஷப் பண்ட் அழகாக பேட்டிங் செய்தார். எனவே தற்போது இந்தியா அவரை 3 அல்லது 4வது இடத்தில் இடத்தில் விளையாட வைப்பார்கள் என்று நினைக்கிறேன். அதே போல அக்சர் பட்டேலை அவர்கள் தொடர்ந்து வைத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்”

- Advertisement -

“சொல்லப்போனால் 8வது இடத்தில் அவர் உங்களுக்கு பேட்டிங்கை வழங்குவார். சமீபத்தில் சஹால் நன்றாக பந்து வீசவில்லை என்பது நீங்கள் அக்சரை வைத்து தொடரை துவங்க வேண்டும் என்பதை காட்டுகிறது. நம்மிடம் 6 நல்ல பவுலர்கள் இருப்பதால் அதைத் தவிர்த்து அதிகமாக படிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சிவம் துபே 7வது இடத்தில் தேவைப்பட்டால் ஸ்லோவான பிட்ச்களில் பந்து வீசுவார்”

இதையும் படிங்க: டி20 உலககோப்பை அணியில் செலக்ட்டாகி இருந்தாலும் பிளேயிங் லெவனில் ஷிவம் துபே ஆட வாய்ப்பில்லை – ஏன் தெரியுமா?

“பயிற்சி போட்டியில் அவர் கடைசி ஓவரில் ஸ்லோ நன்றாக பந்துகளை வீசி சில விக்கெட்டுகளை எடுத்தார்” என்று கூறினார். தினேஷ் கார்த்திக் கணித்துள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா

Advertisement