டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சிஎஸ்கே அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஷிவம் துபேவும் இடம் பிடித்திருந்தார். சமீப காலமாகவே மிகச்சிறந்த டி20 பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் அவரை டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் சேர்த்தது சரியான முடிவுதான் என்று பலரும் இந்த முடிவை பாராட்டி இருந்தார்கள்.
ஆனால் தற்போது இந்த நிலைமை முற்றிலும் மாறி உள்ளதாக தெரிகிறது. ஏனெனில் இந்தியாவில் ஐபிஎல் தொடரானது நடைபெற்று கொண்டிருந்தபோது இந்திய அணி அறிவிக்கப்பட்ட வேளையில் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது.
ஆனால் டி20 உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் விளையாடிய 6 போட்டிகளில் வெறும் 60 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அதுமட்டும் இன்றி இரண்டு முறை அவர் டக் அவுட்டும் ஆகியுள்ளார். இது அவரது பார்ம் சரிவை அப்பட்டமாக வெளிக்காட்டுவதாக அமைந்தது.
அதோடு டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக தற்போது பயிற்சி போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடியது. அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் தனிப்பட்ட முறையில் சிவம் துபே மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார்.
மிடில் ஓவர்களில் சுழப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு அதிரடியாக விளையாடுவார் என்கிற காரணத்தினாலே இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ஷிவம் துபே தற்போது சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதோடு ரிஷப் பண்ட் மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆடுவதால் துபே வெளியில் அமர வைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஜெய்ப்பதற்கு முன்பாகவே ஆடிய வங்கதேசத்தை அடக்கிய தோனி மாஸ்டர்க்ளாஸ் மேஜிக்.. டி20 உ.கோ ரீவைண்ட்
மேலும் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் வேண்டுமென்றால் ஒருவர் பார்மை இழந்து விட்டால் உடனடியாக மீண்டும் சில போட்டிகளில் விளையாடி விட்டு பார்முக்கு திரும்ப முடியும். ஆனால் டி20 போட்டிகளில் பார்மை மீட்டெடுப்பது மிகவும் கடினம் என்பதனால் டி20 உலககோப்பை தொடர் போன்ற ஒரு முக்கிய தொடரில் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளித்து இந்திய அணி ரிஸ்க் எடுக்காது என்பதே உண்மை.



