பாபர் கிடையாது.. அவரால் தனியாளா இந்தியாவை தோற்கடிக்க முடியும்.. மற்றபடி பாகிஸ்தான் சுமார் தான்.. ஃகைப்

Mohammad Kaif 3
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை ஜூன் 5ஆம் தேதி நியூயார்க் நகரில் எதிர்கொள்கிறது. அதே மைதானத்தில் ஜூன் 9ஆம் தேதி இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியில் வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

இவ்விரு அணிகளை பொறுத்த வரை பாகிஸ்தானை விட இந்தியா வலுவான அணியாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக 50 ஓவர் உலகக் கோப்பை இதுவரை பாகிஸ்தானை சந்தித்த அனைத்து போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. அதே போல டி20 உலகக் கோப்பையில் 2021 துபாய் தோல்வியை தவிர்த்து எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வென்றுள்ளது.

- Advertisement -

பலவீனமான பாகிஸ்தான்:
எனவே இம்முறையும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெறும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் தற்சமயத்தில் பாகிஸ்தான் மிகவும் பலவீனமான அணியாக இருப்பதை அனைவரும் அறிவார்கள் என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார். எனவே பாகிஸ்தானை வீழ்த்தி இம்முறையும் இந்தியா வெற்றி பெறும் என்று அவர் தைரியமான நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

அதே சமயம் பஃக்கார் ஜமான் அதிரடியாக விளையாடி இந்தியாவை தனி ஒருவனாக தோற்கடிக்கும் அளவுக்கு திறமையை கொண்டுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் 120 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே அடிக்கக் கூடியவர்களாக இருப்பதால் இந்தியா வெல்லும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானின் பேட்டிங் பலவீனமாக இருப்பது அனைவருக்கும் தெரியும்”

- Advertisement -

“பக்கார் ஜமான் கொஞ்சம் அதிரடியாக விளையாடுவார். ஒருவேளை அவர் நெருப்பாக விளையாடினால் தனி ஒருவனாக வெற்றியை பெற்றுக் கொடுப்பார். இப்திகார் அகமது வேகமாக விளையாடுவார். ஆனால் அவர்களை தவிர்த்து மற்ற அனைவரும் 120 -125 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுகின்றனர். எனவே அவர்களுடைய பேட்டிங்கை பார்த்து நீங்கள் பயப்பட வேண்டியதில்லை”

இதையும் படிங்க: 2021இல் இந்தியாவை தெறிக்கவிட்டு பாகிஸ்தான் தோற்கடிக்க ரமீஸ் ராஜா தான் காரணம்.. ரிஸ்வான் பேட்டி

“ஆனால் அவர்களின் பவுலிங் கொஞ்சம் பயத்தை கொடுக்கக் கூடியது. அவர்களிடம் சாகின் அப்ரிடி மற்றும் நாசிம் ஷா ஆகியோர் உள்ளனர். நாசீம் ஷா இந்தியாவுக்கு கடந்த உலகக் கோப்பையில் விளையாட வரவில்லை. காயமடைந்த அவர் இங்கே ஃபிட்டாக உள்ளார். அமெரிக்க பிட்ச்சில் கொஞ்சம் பவுன்ஸ் இருக்கும். அங்கே அவர் நல்ல பவுலர். 2022இல் வெற்றி பெற்ற மெல்போர்ன் போட்டியில் கூட அவருக்கு எதிராக விராட் கோலி கொடுத்த கேட்சை பாகிஸ்தான் தவற விட்டது” என்று கூறினார்.

Advertisement